UA சான்றிதழில் மேலும் மூன்று பிரிவு.. Piracy தடுக்க அதிரடி திட்டம்.. – புதிய சட்ட மசோதாவில் என்னென்ன உள்ளது?.. விவரம் இதோ..

ஒளிப்பதிவு சட்ட மசோதா ஒப்புதல் விவரம் இதோ - Cinematograph amendment bill 2023 approved here is the detail | Galatta

பொதுவாகவே வெகுஜன மக்களிடம் கொண்டு செல்லப்படும் திரைப்படங்கள் அல்லது காட்சி பொருட்கள் எந்தவொரு சிக்கல்களையும் சமூகத்தில் ஏற்படுத்தி விடாமல் பார்த்துக் கொள்ளவும் அதற்கேற்ப தணிக்கை குழு செயல்படுவதும் பல நாடுகளில் வழக்கமாகவே உள்ளது. அதன்படி நம் நாட்டில் திரைப்படங்களில் ஒழுக்கத்தையும், அறநெறிகளையும் எந்த சூழலிலும் மீறாத வகையில் காட்சிகள் இருக்க வேண்டும் என்பதற்காக இந்திய திரைப்பட தணிக்கை குழு அமைக்கப்பட்டது. அதன்படியே நாம் இன்று பார்க்கும் அனைத்து திரைப்படங்கள், விளம்பர படங்கள், காட்சி பொருட்கள் அனைத்தும் மேற்பார்வையிட்டு திருதப்பட்டே நம்மிடம் வந்து சேர்கிறது.

சமூதாயத்தில் குந்தகம் விளைவிக்காத காட்சிகளை இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள 1952 ம் ஆண்டு திரைப்பட தணிக்கை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை திருத்தி மேலும் சில வரைமுறைகளை துல்லியமாக வழங்க 2023 ம் ஆண்டு ‘ஒளிப்பதிவு திருத்த மசோதா’ அறிமுகப்படுத்துவதற்காக தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகம் மத்திய அமைச்சரவையில்  சில வரையறைகளை முன்மொழிந்துள்ளது. இதனை தற்போது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் திரைப்படங்களுக்கு வழங்கப்படும்  தணிக்கை சான்றிதழ் வழிமுறை மேம்படுத்தவும். திரைப்படங்கள் திருட்டு அச்சுறுத்தலை முழுமையாக கட்டுபடுத்த முடியும்.  இதையடுத்து திரைத்துறையினர் இந்த மசோதாவை வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகம் முன்மொழிந்த ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 ல் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்கள்:

1. திரையரங்குகளில் கேம்கார்டிங் மூலம் திரைப்படங்கள் திருடப்படுவதை கண்காணிக்கவும். திருட்டுத்தனமாக படங்களை நகலெடுப்பதை தடுக்க முடியும். விதிமுறையை மீறி திரைப்படங்கள் திருடுவோருக்கு கடுமையான தண்டனை மற்றும் அதற்கான விதிகளும் மசோதாவில் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திரைப்படங்கள் திருட்டு அதிரடியாக தடுக்க முடியும். மேலும் சிறை தண்டனை, அபராதம் ஆகியவை மேலும் பைரசி செய்பவர்களுக்கு சம்மட்டி அடியாக இருக்கும்.

2. தற்போது உள்ள தணிக்கை சான்றிதழ் படி. U சான்றிதழ் அனைத்து வயதினருக்கும், A சான்றிதழ் பெரியோருக்கு மட்டுமானது UA சான்றிதழ் பெரியோர்களின் கண்காணிப்பில் குழந்தைகளும் காணலாம். என்று இருந்த பிரிவில்  UA வகை சான்றிதழ் பிரிவினை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளது. அதாவது UA சான்றிதழில் ஏழு வயது மேல் இருப்பவர்கள் UA7+ என்ற பிரிவிலும் 13 வயதிற்கு மேல் இருப்பவர்கள் UA13+ என்ற பிரிவிலும் UA16+ என்ற பிரிவிலும் பிரிக்கப்படவுள்ளன. இதன்மூலம் பெற்றோர் தங்கள் குழந்தை அந்த திரைப்படங்களை பார்க்க வேண்டுமா என்ற பரிசீலுக்கு சிறந்த வகையில் உதவும்.  இது ஏற்கனவே வெளிநாடுகளில் அமலில் உள்ளது. இந்தியாவில் அமலாவதை மக்கள் வரவேற்று வருகின்றனர்.

3. 10 ஆண்டுகளுக்கு மட்டுமே திரைப்படங்கள் சான்றிதழ் செல்லுபடியாகும் என்ற சட்டம் திருத்தப்பட்டு தற்போது கொடுக்கப்படும் சான்றிதழ் நிரந்தராமாக செல்லுபடியாகும் என்று மாற்றப்பட்டுள்ளது.

4.  தொலைக்காட்சிக்கான திரைப்படங்கள் வகை : இனி தொலைகாட்சிகளில் ஒளிபரப்பிற்காக திருத்தப்பட்ட திரைப்படத்திற்கு மறு சான்றிதழ் வழங்கப்படும். இதன்மூலம் தடை செய்யப்படாத பொது திரைப்படங்கள் மட்டுமே தொலைகாட்சிகளில் ஒளிப்பரப்படும்.

இந்த திருத்தப்பட்ட மசோதாவினை தற்போது திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

“Biopic ஆக உருவாகும் துருவ் விக்ரமின் திரைப்படம்” இயக்குனர் மாரி செல்வராஜ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – அட்டகாசமான அப்டேட் இதோ..
சினிமா

“Biopic ஆக உருவாகும் துருவ் விக்ரமின் திரைப்படம்” இயக்குனர் மாரி செல்வராஜ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – அட்டகாசமான அப்டேட் இதோ..

சர்வதேச மேடையில் மாஸ் காட்டிய நடிகை ஷாமிலி.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படங்கள்.. விவரம் உள்ளே
சினிமா

சர்வதேச மேடையில் மாஸ் காட்டிய நடிகை ஷாமிலி.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படங்கள்.. விவரம் உள்ளே

“ஆஸ்கர் வாங்குறது முக்கியமில்லை..” மேடையை அதிர வைத்த வெற்றிமாறனின் பேச்சு – வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

“ஆஸ்கர் வாங்குறது முக்கியமில்லை..” மேடையை அதிர வைத்த வெற்றிமாறனின் பேச்சு – வைரலாகும் வீடியோ இதோ..