இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் S.S.ராஜமௌலியின் பாகுபலி என்ற பிரம்மாண்ட படைப்புக்குப் பின் அடுத்த பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது RRR. திரைப்படம். DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரிக்கும் RRR திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் பெண் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.

RRR படத்தில் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அஜய் தேவ்கன் , சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவாளர் KK.செந்தில்குமார் ஒளிப்பதிவில் தயாராகும் RRR படத்திற்கு இசை அமைப்பாளர் M.M.கீரவாணி இசை அமைக்கிறார் இந்நிலையில் தற்போது RRR திரைப்படத்தின் பாடல்கள் & இசை குறித்த முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் SS ராஜமௌலி இயக்கத்தில் தயாராகி வரும் RRR படத்தின் ஆடியோ உரிமைகள் அனைத்தையும் பிரபல நிறுவனங்களான டி-சீரிஸ் மற்றும் லஹரி மியூசிக் நிறுவனங்கள் பெற்றுள்ளன. 

இதில் தென்னிந்தியாவின் ஆடியோ உரிமைகளை லஹரி மியூசிக் நிறுவனமும் வட இந்தியாவின்(ஹிந்தி) ஆடியோ உரிமைகளை டி-சீரிஸ் நிறுவனமும் பெற்றுள்ளது. முன்னதாக இப்படத்தில் இருந்து வெளியான மேக்கிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் விரைவில் இப்படத்தின் டீசர் , டிரைலர், பாடல்கள் என அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.