இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் SS.ராஜமௌலியின் பிரம்மாண்ட திரைப்படங்கள் இந்திய ரசிகர்களிடையே அதிக  வரவேற்பை பெற்றுள்ளது. பாகுபலி படத்திற்குப் பிறகு இவர் இயக்கப்போகும் அடுத்த திரைப்படத்திற்காக மொத்த இந்தியாவும் காத்திருந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான  ராம் சரண் மற்றும் ஜூனியர் NTR இணைந்து நடிக்கும் RRR திரைப்படம் தயாரானது. 

இறுதிக்கட்ட பணிகளில் உள்ள திரைப்படத்தில்  பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் மற்றும் நடிகை ஆலியா பட் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்திய விடுதலைப்போராட்ட வீரர்களை மையப்படுத்தி நகரும் கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ராஜமவுலியின் ரசிகர்களுக்கு திரைவிருந்தாக அமைய உள்ளது. 

KK.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையமைக்கிறார். மிகப் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இத்திரைப்படத்தின் அப்டேட்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக இத்திரைப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் அறிமுகமாக வெளிவந்த போஸ்டர்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இயக்குனர் SS.ராஜமௌலியின் தந்தையான இந்திய சினிமாவின் மூத்த முன்னணி எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் சமீபத்தில் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் RRR திரைப்படம் குறித்து பேசியிருப்பது எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்திருக்கிறது. 

சமீபத்தில் SS.ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR திரைப்படத்தின் ஒரு ஆக்ஷன் காட்சியை கண்ட விஜய் விஜயேந்திர பிரசாத் அந்த காட்சியை கண்டு கண்கலங்கியதாக தெரிவித்துள்ளார். இந்திய அளவில் பல ரசிகர்கள் எதிர்பார்க்கும் RRR திரைப்படத்தைப் பற்றி விஜயேந்திர பிரசாத் அவர்கள் தெரிவித்துள்ள இந்த தகவல்  இந்திய ரசிகர்கள் மத்தியில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.