தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்  உரிமையாளரும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான திரு.முரளி ராமநாராயணன்  நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த திரு.முரளி ராமநாராயணன் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திரு.முரளி ராமநாராயணன் அவர்களுக்கு இருதயத்தில் அடைப்புகள்  இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து இதயத்தில் இருக்கும் அடைப்புகளை நீக்குவதற்கான சிகிச்சையில் மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர் .

மாரடைப்பு ஏற்பட்டு திரு.முரளி ராமநாராயணன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து பல திரை பிரபலங்களும் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.

 இந்நிலையில் தீவிர சிகிச்சையின் முடிவில் திரு.முரளி ராமநாராயணன் அவர்களுக்கு இருதயத்தில் கண்டறியப்பட்ட அடைப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டு அவர் இப்போது நலமோடு இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.