தெலுங்கில் நானி நடித்த கேங்லீடர் படத்தின் ஹீரோயினாக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பிரியங்கா மோகன்.இந்த படத்திலேயே பெரிய வரவேற்பை பெற்ற இவர் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வெகுவிரைவில் மாறினார்.ஒரு படம் மட்டுமே நடித்திருந்த பிரியங்கா மோகனின் புகைப்படங்கள் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் செம ட்ரெண்ட் அடித்து வந்தன.

தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி பல தென்னிந்திய ரசிகர்களை இவர் பெற்றிருந்தார்.அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படம் மார்ச் மாதம் வெளியாகவுள்ளது.இந்த படம் வெளிவருவதற்கு முன்பே தமிழிலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளார் பிரியங்கா மோகன்.

இவருக்கென்று பல ரசிகர் பக்கங்கள் உருவாகி இருக்கின்றன.இவர் நடித்த முதல் தமிழ் படம் வெளிவருவதற்கு முன்பே மேலும் இரண்டு பெரிய படங்களில் கமிட் ஆகியுள்ளார் ப்ரியங்கா.சூர்யா ஜோடியாக சூர்யா 40 மற்றும் சிவகார்த்திகேயன் ஜோடியாக டான் உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார் பிரியங்கா மோகன்.

இதனை தவிர தெலுங்கில் ஷ்ராவ்ந் ஜோடியாக ஸ்ரீகரம் என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் மார்ச் 11 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.இந்த படத்தின் வீடியோ பாடல் ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த பாடல் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்