தென்னிந்தியாவின் மிகப்பெரிய சினிமா நிறுவனமாக திகழ்ந்து வந்தது SPI சினிமாஸ் நிறுவனம்.தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா,புதுச்சேரி,மும்பை என்று பெரிய நகரங்களில் இவை அடையாளமாக திகழ்ந்து வந்தன.குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் 5 கிளைகள் வைத்திருந்தது இந்த நிறுவனம்.சென்னையில் மட்டும் எஸ்கேப், சத்யம் சினிமா, S2 என பல்வேறு பெயர்களில் சத்யம் இயங்கி வந்தது.

கடந்த 2018-ல் இந்த நிறுவனத்தின் மெஜாரிட்டி ஆன பங்குகளை PVR நிறுவனம் கைப்பற்றியது.இந்த செய்தி வெளிவந்த போது ரசிகர்கள் மிகவும் மனமுடைந்து போனார்கள்.சத்யம் சென்னையின் ஒரு அடையாளமாக இருந்தது,அந்த திரையரங்கில் படம் பார்ப்பது பெரிய பாக்கியமாக திரைவிரும்பிகள் பார்த்து வந்தனர்.திரையரங்கத்தின் பராமரிப்பு,படம் பார்க்கும் வசதிகள் என்று ரசிகர்களுக்கு நிகராக திரையரங்கமும் தங்கள் பங்கிற்கு ரசிகர்களை திருப்தி படுத்தினர்.இங்கு விறக்கப்ட்ட பாப்கார்ன்,கோல்டு காபி,டோனட் உள்ளிட்டவை ரசிகர்களின் மனம் கவர்ந்தவையாக இருந்தன.டிக்கெட் விலை,ஸ்னாக்ஸ் விலை என்று அனைத்துமே ரசிகர்களுக்கு ஏற்றார் போலயே இருக்கும்.இப்படி பல காரணங்களால் சத்யம் மற்றும் அதனை சார்ந்த திரையரங்குகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இதற்கு அப்படியே நேர்மாறாக PVR இருந்தது.படம் போடுவததில் தாமதம்,ஸ்னாக்,பார்க்கிங் என்று எல்லாவற்றிலும் அதிக விலை என்று ரசிகர்கள் மத்தியில் பெயர் வாங்கி இருந்தது PVR நிறுவனம்.இந்த நிறுவனம் சத்யம் உள்ளிட்ட திரையரங்குகளை கைப்பற்றியது என்றவுடன் ரசிகர்கள் இனிமேல் சத்யமிலும் படம் லேட்டா போடுவாங்க,பார்க்கிங்,ஸ்னாக்ஸ் எல்லாம் அதிகமாகிவிடும் என்று புலம்பி வந்தனர்.சத்யமின் எந்த ஒரு பொருளும் மாறாது PVR பெயரில் இயங்கும் என்று தெரிவித்திருந்தனர்.இதனால் ரசிகர்கள் சற்று நிம்மதியடைந்தனர்.

சென்னையில் உள்ள SPI சினிமாஸ் அலுவலகத்தின் பெயர்ப்பலகை சமீபத்தில் PVR என்று மாற்றப்பட்டது,இது சத்யம் திரையாங்கின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த பெயர்ப்பலகை மாற்றும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பல ரசிகர்களும் இது குறித்து மனமுடைந்து பதிவிட்டு வருகின்றனர்.சென்னையின் ஒரு அடையாளமாக இருந்த SPI சினிமாஸ் பெயர்ப்பலகை மாற்றம் பல ரசிகர்களிடமும் வருத்தத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்