Work from home வீட்டிலிருந்தே பணியாற்றும் ஊழியர்கள் லீவு எடுக்கச் சொல்லும் காரணம் ஸ்கூல் பசங்கள விட வேற லெவல் காமெடியாக இருக்கிறது. 

கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழ்நாடு உட்பட உலகமே ஊரடங்கில் முடங்கிப் போய் இருக்கிறது. இதன் காரணமாக, ஐ.டி. துறை முதல் ஊடகத்துறை வரை பல்வேறு துறைகளைச் சார்ந்த ஊழியர்களும் தங்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர்.

அதன்படி, தமிழகத்தைப் பொறுத்த வரை கடந்த 4 மாத காலமாக பலரும் தங்கள் வீட்டில் இருந்தபடியே Work from home ல் பணியாற்றி வருகின்றனர். 

இதனால், அந்த ஊழியர்களுக்கு மாதம் சில நாட்கள் விடுமுறை இருக்கும். அவர்கள் அலுவலகம் வந்து விடுமுறை எடுக்கும் போது, குடும்பத்தில் பங்சன் என்று தான் பெரும்பாலும் லீவு எடுப்பது வழக்கம்.

ஆனால், தற்போது Work from home வீட்டிலிருந்தே பணியாற்றும் ஊழியர்கள், லீவு எடுக்கச் சொல்லும் காரணங்கள் தான், அது உண்மையாகவே இருந்தாலும்; கேட்கும் போதே காமெடியாக இருக்கிறது. 

அதன்படி, முதல் இரு காரணங்கள் “கரண்ட் இல்லை சார். இன்று புல் டே கட். நெட் ஒர்க் பிரச்சனை சார். எனக்கு லீவு தாங்க ப்ளீஸ்” என்தாக இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து, “நைட் ரொம்ப நேரம் நெட்ஃபிலிக்ஸில் படம் பார்த்துட்டேன் சார். இப்ப வேலை செய்யுற மூடு இல்ல. உடம்பு அடிச்சுப் போட்ட மாதிரி இருக்கு. தயவு கூர்ந்து நீங்கள் தப்பா எடுத்துக்கலேனா.. நான் லீவு எடுத்துக்கலமா சார்?” 

 “என் மனைவியோடு ஒரு 10 நாளா பேசாமல் இருந்து, இப்ப தான் சமாதானம் ஆனோம். அதனால், இன்னக்கு மட்டும் லீவு எடுத்துக்கவா ப்ளீஸ்?”

“சார், என் மனைவி வாமீட் பண்ணிட்டா.. மருத்துவமனைக்கு கூட்டிட்டு போகனும்.. லீவு?”

“எனக்கு காய்ச்சல் அடிக்கிற மாதிரியே இருக்கு, நான் இன்று லீவு எடுத்துக்கவா? ப்ளீஸ்..”

“வீட்டில் குழாய் பழுதாகி தண்ணீர் வீடு முழுவதும் வழிந்தோடுகிறது. இந்த சமயத்தில் பிளம்பர் இல்லை. அதனால், நான் தான் அதைச் சரி செய்ய வேண்டும். லீவு தருவீர்களா சார்?”

“நான் எப்போதும் செல்ஃபோன், லேப்டாப்பிலேயே நேரம் செலவழிப்பதாக என் பசங்க கவலைப்படுறாங்க. அதனால, என் வேலை எனக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதைப் பசங்களுக்குப் புரிய வைக்க, இன்று ஒரு நாள் விடுப்பு தேவைப்படுகிறது. லீவு எடுத்துகிறேன் சார்”

“உங்களுக்குத் தெரியுமா.. மேற்பரப்புகளில் கொரோனா வைரஸ் 48 மணி நேரம் உயிர் வாழுமாம். எனவே என்னுடைய லேப்டாப்பில் கொரோனா வைரஸ் இருக்குமோனு எனக்கு பயமா இருக்கு. பாதுகாப்பு கருதி எனக்கு 48 மணி நேரம் விடுப்பு வழங்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்”

“துணி துவைக்க வாஷிங் மிஷின் வாங்கி அப்படியே இருக்கு. ஒரு 10 நாளா துணியே துவைக்கல.. இன்னக்கி லீவு எடுத்து எல்லா துணையைத் துவைக்கப் போறேன். லீவு தாங்க சார்..”

“சில நாட்களாக என்னுடைய நாயை வெளியே நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்ல வில்லை. பப்பியுடன் நேரம் செலவழிப்பதில்லை. அதனால, என் டாக் என்னை ரொம்ப மிஸ் பண்ணுது. இன்னக்கி மட்டும் நான் லீவு எடுத்துகிறேன் சார்”

“சார், வீட்டிலேயே இருப்பதால் லீவு விடுப்பதே மறந்து விட்டது. அதனால், இன்னக்கி கொஞ்சம் ஜாலியா இருந்துகிறேனே?! அந்த ஜாலியை அனுபவிக்க எனக்கு இன்று ஒரு நாள் விடுப்பு வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

“வீட்ல சமையல்காரர்கள் இந்த நேரத்தில் அனுமதியில்லை என்பதால் என்னால் சமைக்க முடியவில்லை. நான் அதுல கத்துக்குட்டி.அதனால நான் யூடியூப் பார்த்துக் கற்றுக்கொள்ள இன்று விடுமுறை தாங்க சார்”

“புதுசா டி.வி., வாஷிங் மிஷின் வாங்கினேன். அதற்கு இணைப்பு கொடுக்க கம்பெனியிலிருந்து வெளி நபர்கள் வந்தார்கள். அவர்கள் வந்து சென்றதால் கொரோனா பயம் வந்திருச்சு, வீட்டைச் சுத்தமா துடைச்சு சானிடைஸர் தெளிக்கனும். அதற்கு விடுமுறை எடுத்துக்கொள்ளவா சார்?” 

“பக்கத்து வீட்டுக்காரர்கள் கொரோனா டெஸ்ட் எடுக்கப் போய் இருக்கிறார்கள். அதனால, அவர்களுடைய குழந்தையை நான் தான் பாத்துக்கிறேன் என்னை நம்பி  விட்டுச் சென்றுள்ளனர். வேலையையும் குழந்தையையும் ஒரே நேரத்தில் பார்த்துக்கொள்ளக் கொஞ்சம் கஷ்டமா இருக்கு என்பதால், எனக்கு லீவு தருவீர்களா?” 

“பக்கத்து வீட்டுல பிறந்த நாள் பங்சன். இனிப்பு கொடுக்க நிறைய குழந்தைகள் வந்தாங்க.. பக்கத்து வீட்டுல இருந்து தாத்தா பாட்டி வந்து ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தாங்க.. கொரோனா பயம் வந்திருச்சு.. ஒரு மாதிரியா இருக்கு. லீவு எடுத்துக்கிறேச் சார்”

“சார், என் ஒரு வயசு யையன் அடிக்கடி ஆய் போயிகிட்டே இருக்கான் சார். அத கழுவி விடவே எனக்கு நேரம் சரியா இருக்கு. கடைக்குப் போன மனைவி இன்னும் வீட்டுக்கு வரல. அதனால, இன்னக்கி மட்டும் லீவு தாங்க சார் ப்ளீஸ்”

இது போன்ற காரணங்களைத் தான் Work from home வீட்டிலிருந்தே பணியாற்றும் ஊழியர்கள் லீவு எடுக்கச் சொல்லக்கூடிய காரணங்களாக இருக்கின்றன. அதற்கு, ஸ்கூல் பசங்க பரவாயில்லை என்ற ரீதியில் தான் இருக்கிறது.