வாகன ஓட்டிகளின் இதயத்துடிப்பாய் இருக்கும் செய்தி பெட்ரோல் விலை. நாட்டின் சில இடங்களில் பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்துவிட்டது. கிரிக்கெட் வீரர்களை செஞ்சுரி அடிக்கச் சொன்னால் இங்கு பெட்ரோல் விலை அல்லவா அந்த காரியத்தை செய்கிறது என்று வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். பெட்ரோல் விலை உயர்வால் கவலையில் இருந்தாலும் அது குறித்து மீம்ஸ் போட்டும் சந்தோஷப்படுகிறார்கள் நெட்டிசன்கள். 

தற்போதைய சூழலில் சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பெட்ரோல் படுத்தும் பாடால் சைக்கிள் திருட்டு அதிகரிக்கும் என்று கிண்டல் செய்து பதிவு செய்தும் வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் போட்ட ஒரு போஸ்ட் தற்போதைய சூழலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, பெட்ரோல் பங்க் பையன்- சார், எவ்வளவுக்கு சார் பெட்ரோல்.
திருவாளர் பொதுஜனம்-ஒரு 2 ரூபாய்க்கோ, 4 ரூபாய்க்கோ வண்டி மேல தெளிச்சிவிடு... வண்டிய.. கொளுத்திட்டு போறேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதை பார்த்த இணையவாசிகளோ, சிவகார்த்திகேயன் ஒரு தீர்க்கதரிசி. 9 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து விட்டார் என்று புகழாரம் சூட்டி வருகின்றனர். முன்னதாக பெட்ரோல் விலை உயர்வு குறித்து வைரமுத்து கூட ட்வீட் செய்திருந்தார். காதல் வந்தால் சொல்லி அனுப்பு, பெட்ரோல் இருந்தால் வருகிறேன் என்கிற என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள் என்று ட்வீட் செய்திருந்தார்.

சிவகார்த்திகேயன் கைவசம் டாக்டர் மற்றும் அயலான் திரைப்படங்கள் தயார் நிலையில் உள்ளது. தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இந்த படத்தை இயக்கி வருகிறார். 

sivakarthikeyan old tweet on petrol price hike goes viral