சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் அயலான்.இந்த படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.24AM Studios இந்த படத்தை தயாரிக்கிறது.

யோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.சில பிரச்சனைகளால் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது.

இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.அயலான் படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கிராபிக்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு செய்யப்பட்டது.சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் டப்பிங் வேலைகள் கொரோனாவுக்கு முன் தொடங்கியது.தற்போது இந்த படத்தின் இயக்குனர் ரவிக்குமார் கொரோனா தொற்று ஏற்பட்டு மீண்டுள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த நோயை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் ரவிக்குமார் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னெச்சரிக்கையோடு இருந்தேன் இருந்தும் கொரோனா என்னை தொற்றியது.எந்தவித அறிகுறியும் இல்லை மூக்கில் ஒழுகியதும் கூட...

Posted by Ravikumar Rajendran on Monday, 10 May 2021