தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய் டிவி.ரசிகர்களின் ரசனை அறிந்து பல புதுமையான நிகழ்ச்சிகளை விஜய் டிவி ஒளிபரப்புவார்கள்.பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட் அடித்து விடும்.இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பலரும் ரசிகர்கள் மத்தியில் நட்சத்திர அந்தஸ்தை பெற்று உயர்ந்துள்ளனர்.

விஜய் டிவியின் செம ஹிட் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சிவாங்கி.தனது வித்தியாசமான குரலால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் சிவாங்கி.அடுத்ததாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார் சிவாங்கி.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமானவராக செல்லப்பிள்ளையாக உருவெடுத்தார் சிவாங்கி.இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை அடுத்து சிவகார்த்திகேயனின் டான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் சிவாங்கி.இவர் பாடிய அஸ்கு மாறோ பாடல் சமீபத்தில் வெளியாகி செம ட்ரெண்ட் அடித்தது.

இன்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.இவருக்கு குக் வித் கோமாளி அஸ்வின்,நடிகர் சிவகார்திகேயன் உள்ளிட்டோர் சிவாங்கிக்கு பிறந்தநாள் பரிசு அளித்துள்ளனர்.இதற்கு'நன்றி தெரிவித்து சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

sivakarthikeyan and cooku with comali ashwin give sivaangi birthday surprise

sivakarthikeyan and cooku with comali ashwin give sivaangi birthday surprise