தமிழ் திரையுலகில் பன்முகத்திறன் கொண்ட நடிகர் சிலம்பரசன். இவர் நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகி பட்டையை கிளப்பியது. சமீபத்தில் கெளதம் மேனன் இயக்கவிருக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் அறிவிப்பு வெளியானது. காதலர் தினத்தில் சிம்பு வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரிதளவில் வைரலானது. செல்லப்பிராணி கோகோவுடன் பேசியபடி வீடியோ வெளியிட்டிருந்தார் சிம்பு. 

இந்நிலையில் சிம்புவின் ஒர்க்அவுட் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ட்ரைனருடன் உடற்பயிற்சி செய்யும் சிம்புவின் இந்த வீடியோ அதிக லைக்குகளை குவித்து வருகிறது. 

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 3-ம் தேதி மாநாடு படத்தின் டீசர் வெளியானது. மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. புயல், மழை பாராமல் ஷூட்டிங் பணிகளில் சிலம்பரசன் ஆர்வம் காட்டியது ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. படத்தில் அப்துல் காலிக் என்ற பாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். 

கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். 

கன்னடத்தில் நார்தன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் முஃப்தி. 2017ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தான் பத்து தல. இந்த படத்தை ஓபிலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். பிரியா பவானி சங்கர், டீஜே அருணாச்சலம், மனுஷ்ய புத்திரன், கலையரசன் ஆகியோர் நடிக்கின்றனர். 

இசைப்புயல் AR ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. நாற்காலியில் சிலம்பரசன் அமர்ந்திருப்பது போன்று போஸ்டர் இடம்பெற்றிருந்தது. கெளதம் மேனன் முக்கிய ரோலில் நடிக்கிறார். படத்திற்கு ராஜீவன் கலை இயக்கம், ராமகிருஷ்ணன் வசனம், பூபதி செல்வராஜ் எடிட்டிங், அன்பறிவு ஸ்டண்ட் பணிகள் மேற்கொள்கிறார்.