நடிகர் சிலம்பரசன் பற்றிய செய்திகள் வந்தால், அன்றைய நாள் முழுவதும் அச்செய்தியே டாக் ஆஃப் தி டவுனில் இருக்கும். அந்த அளவிற்கு ரசிகர்கள் விரும்பும் நாயகனாக உருவெடுத்துள்ளார். நடிகர் சிலம்பரசன் தனது உடலை எடையை குறைத்து பழைய சிம்புவாக வந்து நின்றதே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக இருந்தது. அதிலும் வித விதமான போட்டோஷூட்டுகளை செய்து இன்பதிர்ச்சி ஏற்படுத்தினார். 

சமீபத்தில் வெளியான நீச்சல் குள போட்டோக்கள் அதற்கு உதாரணம். இந்நிலையில் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையவாசிகளை ஈர்த்து வருகிறது. Winter wear எனப்படும் குளிர்கால உடைகளை அணிந்து தாடி மீசை கொண்ட கெட்டப்பில் போட்டோஷூட் செய்து பட்டையை கிளப்பியுள்ளார் சிம்பு. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், கெட்டவன் திரைப்படம் மீண்டும் துவங்கியுள்ளதா என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

அதற்கு முக்கிய காரணம் கெட்டவன் திரைப்படம் சிம்பு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம். காளை, சிலம்பாட்டம் போன்ற படங்கள் வெளியான தருணத்தில் சிம்பு லாங் ஹேர் ஸ்டைலில் இருந்தார். அப்போது பார்த்த சிம்புவை பார்ப்பது போல் உள்ளது என மற்றோரு தரப்பினர் கமெண்ட் செய்து வருகின்றனர். 

புதுச்சேரியில் நடைபெற்று வரும் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிலம்பரசன். சமீபத்தில் மாநாடு படத்தின் இடைவெளியின் போது தனது செல்ல மருமகனுடன் காரில் பயணம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். 

கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நடிக்கின்றனர். 

முன்னதாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்தார் சிலம்பரசன். ஒரு மாத காலத்திற்குள் நடித்து முடித்ததுடன், டப்பிங்கும் பேசிக் கொடுத்துவிட்டார். முறையான பாதுகாப்புடன் புதுச்சேரியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது மாநாடு படக்குழு. புயல், மழை பாராமல் ஷூட்டிங் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார் சிலம்பரசன். ரசிகர்களுக்காக மீண்டும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அவரை பாராட்டி வருகின்றனர் STR வெறியர்கள்.