"ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்திற்கான எமோஷனல் RIDE..!"- ஷங்கர் பகிர்ந்த அட்டகாசமான ஷூட்டிங் அப்டேட்! வைரல் புகைப்படம் இதோ

ராம்சரணின் கேம் சேஞ்சர் பட ஷூட்டிங் அப்டேட் பகிர்ந்த ஷங்கர்,shankar shared a shooting update of ram charan in game changer movie | Galatta

தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடித்து வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த மிக முக்கிய தகவலை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் பகிர்ந்து கொண்டார்.  இந்திய சினிமாவின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை தொடர்ந்து கொடுத்து ரசிகர்களின் இதயங்களில் ஃபேவரட் இயக்குனராக திகழும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 2.O திரைப்படம்  வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  தன்னுடைய ஒவ்வொரு திரைப்படங்களையும் பிரம்மாண்ட படைப்புகளாக உருவாக்கும் இயக்குனர் ஷங்கரின் திரைப்படங்களுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்து இமாலய வெற்றி பெற்ற எந்திரன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைத்த 2.O திரைப்படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தை இயக்குனர் ஷங்கர் தொடங்கினார். ஆனால் விபத்து காரணமாக தடைப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் மீண்டும் தொடங்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இதனிடையே முதல்முறையாக நேரடி  தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தையும் தொடங்கிவிட்டார். கேம் சேஞ்சர் படம் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்தியன் 2 திரைப்படத்தின் மீதான தடைகள் நீங்கியதால் இரண்டு திரைப்படங்களையும் ஒரே சமயத்தில் பம்பரமாய் சுழன்று இயக்குனர் ஷங்கர் உருவாக்கி வருகிறார்

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கேம் சேஞ்சர் படத்திற்கு கதாசிரியராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  ராம்சரண் உடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கும் இந்த கேம் சேஞ்சர் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா மிரட்டலான வில்லனாக நடிக்கிறார். மேலும் அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், சமுத்திரகனி, நாசர், நவீன் சந்திரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவில் சபீர் முஹம்மது படத்தொகுப்பு செய்யும் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இப்படத்திற்கான வசனங்களை மத்திய அமைச்சரும் முன்னணி எழுத்தாளருமான சு.வெங்கடேசன் அவர்களும் பாடலாசிரியர் விவேக் அவர்களும் எழுதி இருக்கின்றனர்.  

கேம் சேஞ்சர் திரைப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில் தேவையான நடிகர்கள் இல்லாததன் காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்படுவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (அக்டோபர் 10ஆம் தேதி) தொடங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து இயக்குனர் ஷங்கர் தனது X பக்கத்தில், "நேற்றிலிருந்து ஹைதராபாத்தில் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கான ஒரு எமோஷனல் ரைடு உருவாக்கி வருகிறோம்" எனக் குறிப்பிட்டு படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் கேம் சென்டர் திரைப்படத்தின் அந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ…
 

Crafting an emotional ride for our Game Changer since Yesterday in Hyderabad!@AlwaysRamCharan @MusicThaman @SVC_official @DOP_Tirru #gamechanger pic.twitter.com/EcXf3y6zdL

— Shankar Shanmugham (@shankarshanmugh) October 10, 2023