"மெட்டல்ஸ வச்சிட்டு பெட்டல்ஸ எடுப்போம்"- ரசிகர்கள் எதிர்பார்த்த தளபதி விஜயின் லியோ பட 3வது பாடல் ரிலீஸ் அறிவிப்பு இதோ!

தளபதி விஜயின் லியோ பட 3வது பாடல் ரிலீஸ் அறிவிப்பு,Thalapathy vijay in leo movie 3rd single release announcement | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தளபதி விஜயின் லியோ திரைப்படத்திலிருந்து மூன்றாவது பாடலாக திரைப்படத்திலிருந்து மூன்றாவது பாடலாக வெளிவரும் ஒரு அழகான பாடலின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியானது.  இந்த 2023 ஆம் ஆண்டில் இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக நாளுக்கு நாள் பெரும் ஹைப்பை கிளப்பிய தளபதி விஜயின் லியோ திரைப்படம் அடுத்த சில தினங்களில் வெளிவருகிறது. ஆயுத பூஜை விடுமுறையை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் பக்கா பிளானிங்கோடு உலகம் முழுவதும் மிகப் பெரிய அளவில் பிரம்மாண்டமாக வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. தளபதி விஜயின் திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிரட்டலான அதிரடி ஆக்சன் நிறைந்த திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த லியோ திரைப்படத்தில் CG உதவியோடு செய்யப்பட்டிருக்கும் கழுதைப்புலி ஆக்சன் காட்சி தியேட்டரில் பக்கா விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தொழில்நுட்ப குழுவைப் பொறுத்த வரைக்கும் இந்திய சினிமாவில் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான மனோஜ் பரமஹம்சா அவர்களின் அட்டகாசமான ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கும் லியோ திரைப்படத்திற்கு சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்ற தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். அன்பறிவு மாஸ்டர்களின் அதிரடியான ஆக்ஷனில் உருவாகி இருக்கும் இந்த லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். முன்னதாக கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி ஆகிய படங்களில் இணைந்து நடித்த ரசிகர்களின் ஃபேவரட் PAIR-ஆன தளபதி விஜய் - திரிஷா ஜோடி 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கிறது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். 

 சமீபத்தில் வெளிவந்த லியோ திரைப்படத்தின் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்திருக்கும் நிலையில், ரிலீஸ்க்கு ஆறு மாதங்களுக்கு முன்பே UKவில் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கப்பட்டு இப்போதே பாக்ஸ் ஆபிஸில் லியோ படம் சாதனை படைத்து வருகிறது. முன்னதாக ராக் ஸ்டார் அனிருத் இசையில் முதல் பாடலாக தளபதி விஜய் குரலில் வந்த வந்த "நா ரெடி" பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி செம ஹிட்டடித்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த 2வது பாடலான "#BADASS" பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த லியோ திரைப்படத்தின் 3வது பாடல் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.  ஒரு அழகான பாடலாக "அன்பெனும்" எனும் பாடல் நாளை (அக்டோபர் 11) வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில், “மேட்டல்ஸெல்லாம்  கீழ வச்சிட்டு பெட்டல்ஸெல்லாம் கைல எடுப்போம்” என குறிப்பிட்டு தளபதி விஜய் மற்றும் திரிஷா இருவரும் இருக்கும் ஒரு அசத்தலான புதிய போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் இதோ…

Metals lam keela vachitu, petals ah kaila edupom 😁

Get ready to swoon, because #Anbenum is dropping soon ❤️#LeoThirdSingle is releasing Tomorrow.. #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @7screenstudio @Jagadishbliss @SonyMusicSouth #Leopic.twitter.com/DFbjzQMLud

— Seven Screen Studio (@7screenstudio) October 10, 2023