மெட்டி ஒலி,கோலங்கள்,வாணி ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் நீலிமா ராணி.தன்னுடைய நடிப்பாலும்,அழகாலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.இதுமட்டுமின்றி நான் மகான் அல்ல,திமிரு,பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடரில் ஒன்றான அரண்மனைக்கிளி தொடரில் நடித்து வந்தார்.இந்த தொடரில் துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.இந்த தொடரில் இருந்து விலகுவதாக 2020 தொடக்கத்தில் அறிவித்தார்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த தொடர் இவர் விலகிய கொஞ்ச நாட்களிலேயே கைவிடப்பட்டது.

இவர் கருப்பங்காட்டு வலசு என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மேலும் ஜீ தமிழில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பை தொடங்கிய என்றென்றும் புன்னகை தொடரை தயாரித்தும் வருகிறார் நீலிமா ராணி.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் நீலிமா புகைப்படங்கள் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

சமீபத்தில் தான் இரண்டாவது முறையாக கர்பமாக இருப்பதை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார் நீலிமா.இதனை அடுத்து இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.தற்போது தனது கர்ப்பகால போட்டோஷூட் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.இந்த போட்டோஷூட்டை கீழே உள்ள லிங்கில் காணலாம்