இத LIFE LONG என் மண்டைல போட்டு திரிய முடியாதுல... திருமணம் நின்றது குறித்து மனம் திறந்த திவ்யா கணேஷ்! ட்ரெண்டிங் வீடியோ

திருமணம் நின்றது குறித்து மனம் திறந்து பேசிய திவ்யா கணேஷ்,serial actress divya ganesh about her marriage called off | Galatta

தமிழ்நாட்டு சின்னத்திரை நடிகைகளின் மிகவும் பிரபலமானவர் நடிகை திவ்யா கணேஷ். சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான திவ்யா கணேஷ் பின்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு & சுமங்கலி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி எனும் கதாபாத்திரத்தில் நடித்த திவ்யா கணேஷ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார். 

தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் செல்லமா சீரியலிலும் முன்னணி கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ் நடித்துள்ளார். முன்னதாக நடிகை திவ்யா கணேஷுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் அந்த திருமணம் நின்றது. இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசிய நடிகை திவ்யா கணேஷ் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்த வகையில், நடிகை திவ்யா கணேஷிடம் திருமணத்தை நிறுத்துவது என்பது வாழ்க்கையில் எடுக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு முடிவு அல்லவா? எனக் கேட்ட போது, 

"ஐயோ நான் சொல்கிறேனே அதெல்லாம் அவ்ளோ பெரிய முடிவே அல்ல... என்னைப் பொறுத்த வரைக்கும்... ஏன் சொல்கிறேன் என்றால்... உதாரணத்திற்கு சொல்கிறேன், நான் ஒரு உறவில் இருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோமே அது நன்றாக தான் போய்க் கொண்டிருக்கிறது. இடையில் ஏதாவது ஒரு சிறிய விஷயத்திற்காக அதை வேண்டாம் என நாம் முடிவெடுப்போமா மாட்டோம் அல்லவா? ஒரு சிறிய விஷயத்திற்காக நீ எனக்கு வேண்டாம் என தூக்கி போட்டுவிட்டு போக மாட்டோம். அப்படி இருக்கும் போது ஒரு பெரிய முடிவு எடுக்கும் போது கட்டாயமாக குடும்பத்தை யோசிப்போம் நமக்கு பின்னாடி அக்கா இருப்பார்கள் அண்ணா இருப்பார்கள்… அப்படி நம்மை சுற்றி இருப்பவர்கள் யாரையும் யோசிக்க வேண்டாம் நம்முடைய அப்பா அம்மாவை யோசிப்போம். அவர்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்ன பண்ணப் போகிறார்கள். இப்படி நிறைய யோசிப்போம். ஆனால் நாம் தான் அந்த மனிதரோடு வாழ்நாள் முழுவதும் வாழப் போகிறோம். இதை ஒரு மீடியாவிற்காக யாரோ ஒருத்தருக்காக ரோட்டில் போகிறவர் பேசுவார் என்பதற்காக இதை நான் LIFE LONG என்னுடைய மண்டையில் போட்டுக் கொண்டு திரிய முடியாது இல்லயா?" என பதில் அளித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு அட்டகாசமாக பதில் அளிக்க நடிகை திவ்யா கணேஷன் அந்த முழு பேட்டி இதோ…
 

HUG பண்ணகூடாது.. சண்டை போடக்கூடாது... தனது செல்ல மகனின் CUTE-ஆன கோவம் குறித்து பேசிய மைனா நந்தினி! வைரல் வீடியோ
சினிமா

HUG பண்ணகூடாது.. சண்டை போடக்கூடாது... தனது செல்ல மகனின் CUTE-ஆன கோவம் குறித்து பேசிய மைனா நந்தினி! வைரல் வீடியோ

பொன்னியின் செல்வன் 2 படம் வசூலிக்கவுள்ள பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் இத்தனை கோடியா..? மனம்திறந்த இயக்குனரும் நடிகருமான முன்னணி பிரபலம்!
சினிமா

பொன்னியின் செல்வன் 2 படம் வசூலிக்கவுள்ள பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் இத்தனை கோடியா..? மனம்திறந்த இயக்குனரும் நடிகருமான முன்னணி பிரபலம்!

தளபதி விஜயின் லியோ படத்துடன் ஆயுத பூஜை ரேசில் களமிறங்கும் மற்றொரு மாஸ் ஹீரோவின் படம்! அதிரடியான அறிவிப்பு இதோ
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்துடன் ஆயுத பூஜை ரேசில் களமிறங்கும் மற்றொரு மாஸ் ஹீரோவின் படம்! அதிரடியான அறிவிப்பு இதோ