HUG பண்ணகூடாது.. சண்டை போடக்கூடாது... தனது செல்ல மகனின் CUTE-ஆன கோவம் குறித்து பேசிய மைனா நந்தினி! வைரல் வீடியோ

தனது மகன் துருவனின் CUTE-ஆன கோவம் குறித்து பேசிய மைனா நந்தினி,myna nandhini about her son in galatta fans meet | Galatta

தமிழ் சினிமாவிலும் சின்னத்திரையிலும் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உயர்ந்து இருக்கும் நடிகை மைனா நந்தினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றான சரவணன் மீனாட்சி சீரியல் மைனா என்கிற ரேவதி கதாபாத்திரத்தில் நடித்த பிறகு ரசிகர்களால் மைனா (எ) மைனா நந்தினி என அழைக்கப்பட்டார். ஆரம்பத்தில் வெள்ளித்திரையில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த நடிகை மைனா நந்தினி இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் அருள்நிதி கதாநாயகனாக அறிமுகமான வம்சம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜின் கேடி பில்லா கில்லாடி ரங்கா, விக்ரம் பிரபுவின் வெள்ளைக்காரத்துரை, ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட், ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை, தமன்னாவின் பெட்ரோமேக்ஸ், இயக்குனர் சுந்தர்.சி-யின் அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடித்த நடிகை மைனா, கார்த்தியின் விருமன் மற்றும் சர்தார் ஆகிய திரைப்படங்களிலும் முக்கிய படங்களில் நடித்திருந்தார்.

திரைப்படங்களில் மட்டுமல்லாது சின்னத்திரையின் வாயிலாக மிகப்பெரிய புகழை அடைந்த மைனா சரவணர் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மணிகிளி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் நடிகை தமன்னா நடிப்பில் வெளிவந்த நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸிலும் மிக முக்கிய வேடத்தில் மைனா நந்தினி நடித்திருந்தார். முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு யோகேஸ்வரனை மைனா நந்தினி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு துருவன் என்ற அழகிய ஆண் குழந்தையும் உண்டு. 

இந்நிலையில் நமது கலாட்டா சேனலில் நடைபெற்ற நடிகை மைனா நந்தினி FANS MEET நிகழ்ச்சியில் தனயு கணவர் மற்றும் குழந்தையோடு கலந்து கொண்ட நடிகை மைனா நந்தினி ரசிகர்களோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் மைனா நந்தினியின் மகன் துருவனுக்கு எந்த மாதிரியான விஷயங்களுக்கெல்லாம் கோபம் வரும் என்பது குறித்து நடிகை மைனா நந்தினி பகிர்ந்து கொண்டார். முன்னதாக மைனா நந்தினி மற்றும் யோகேஸ்வரன் இருவரிடமும், “ஒன்று ரொமான்ஸ் பண்ணுங்கள் இல்லையென்றால் சண்டை போடுங்கள் ஏதாவது செய்து அவரை (துருவன்) வெறுப்பேற்றுவோம் அவர் என்ன செய்கிறார் என பாப்போம்” என கேட்டபோது, யோகேஸ்வரன் மைனா நந்தினி இடம், “மைனா நான் உன் தோளில் கை போடுறேன்” என மைனாவின் தோளில் கை போட, மைனா துருவனை கூப்பிட்டு "இங்கே பார்" என காட்ட, அவர்களுக்கு இடையில் செல்ல துருவன் முயற்சித்த போது, யோகேஸ்வரன் துருவனிடம், "இங்க பாரு அம்மா தான் FIRST எனக்கு... அம்மா தான் FIRST" என சொல்ல சொல்ல துருவன் கோவத்தில் யோகேஸ்வரனின் கன்னத்தில் அடித்தார். 

தொடர்ந்து பேசிய யோகேஸ்வரன். “இதற்கு மேல் போனால் இன்னும் மோசமாகிவிடும்” என சொல்ல... “ஆமாம் பின்னர் இது தொடர்ச்சியாக நடைபெறும்” என மைனா நந்தினி தெரிவித்தார். அப்போது குழந்தை துருவனிடம், “உனக்கு ஏன் அவ்வளவு கோபம் வருகிறது என நாம் கேட்டபோது, அதற்கு பதிலளித்த மைனா நந்தினி, “நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இவனுக்கு நான்கு வயது ஆகிவிட்டது என்று நினைக்கிறீர்களா? இவனுக்கு இரண்டரை வயது தான் ஆகிறது அவனுக்கு எதுவுமே தெரியாது, அவனுக்கு இருக்கும் POSSESSIVENESS இருக்கும் இந்த மாதிரி யாரும் HUG பண்ண கூடாது சண்டை போடக்கூடாது நாம் ரொம்ப கத்தினால் கூட அப்பா கத்தாதப்பா என்பார்" என மைனா நந்தினி தெரிவித்துள்ளார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த கலகலப்பான பேட்டி இதோ…
 

பக்கா மாஸ் காட்டும் சிலம்பரசன்TRன் பத்து தல பட புது சர்ப்ரைஸ்... ட்ரெண்டாகும் அட்டகாசமான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!
சினிமா

பக்கா மாஸ் காட்டும் சிலம்பரசன்TRன் பத்து தல பட புது சர்ப்ரைஸ்... ட்ரெண்டாகும் அட்டகாசமான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!

உச்சகட்ட பிரம்மாண்டத்தில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2… ரசிகர்களை மிரள வைக்கும் மிரட்டலான ட்ரெய்லர் இதோ!
சினிமா

உச்சகட்ட பிரம்மாண்டத்தில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2… ரசிகர்களை மிரள வைக்கும் மிரட்டலான ட்ரெய்லர் இதோ!

ஆதித்த கரிகாலனின் மரணம் & CLIMAX பற்றிய கேள்விகளுக்கு அட்டகாசமான பதில் கொடுத்த ஜெயமோகன்! பொன்னியின் செல்வன் 2 பட சிறப்பு பேட்டி இதோ!
சினிமா

ஆதித்த கரிகாலனின் மரணம் & CLIMAX பற்றிய கேள்விகளுக்கு அட்டகாசமான பதில் கொடுத்த ஜெயமோகன்! பொன்னியின் செல்வன் 2 பட சிறப்பு பேட்டி இதோ!