பிரபல மாடல் ஆக இருந்து தற்போது சீரியல்களில் முக்கிய நடிகையாக நடித்து மக்கள் மத்தியில் இடம்பிடித்திருப்பவர் பரதா நாயுடு.தேன் மிட்டாய் என்ற படத்தில் நடித்து தனது பயணத்தை தொடங்கிய இவர் தொடர்ந்து பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார்.

தேவதையை கண்டேன் தொடரின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த இவர் செம்பருத்தி தொடரின் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார்.அந்த தொடரில் இவரது கதாபாத்திரமான மித்ரா ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

தற்போது வெள்ளித்திரையில் ஒரு பெரிய ப்ரொஜெக்ட்டில் இணைந்துள்ளது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பரதா.Dream House Production தயாரிக்கும் இந்த படத்தினை Haroon இயக்குகிறார்.இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றுள்ளது.கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளரும் பிரபல நடிகருமான நட்ராஜ் ஹீரோவாக நடிக்கும் இந்த புதிய படத்தில் பரதா முன்னணி வேடத்தில் நடிக்கிறார்.இவருடன் இவள் நந்தினியும் முன்னணி வேடத்தில் நடிக்கிறார்.பரதாவின் வெள்ளித்திரை பயணம் வெற்றியடைய ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.