தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் வரும் 2024 ஆம் ஆண்டில் ஆயிரத்தில் ஒருவன்-2 வெளியிடவுள்ளதாக இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை தூண்டிய நிலையில், தற்பொழுது செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் மற்றொரு பெயரிடாத படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் தொடங்கியது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ஜீப் வாகனம் முக்கிய கதாப்பாத்திரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பொங்கலில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் S12 படத்தின் டைட்டில் லூக் போஸ்டரை நாளை இரவு 7.10 மணிக்கு அறிவிக்கப்படும் என்று செல்வராகவன் அறிவித்துள்ளார்.

இந்த வாரம் தொடர்ந்து தனுஷ் படத்தின் அப்டேட்டுகள் வருவதால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். 

தற்போது சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 திரைப்படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தில் நாயகியாக நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுத பிரபல பாடலாசிரியர் விவேக் சமீபத்தில் ஒப்பந்தமானார். 

இயக்கம் தவிர்த்து நடிக்கவும் செய்கிறார் செல்வராகவன். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கவிருக்கும் சாணிக் காயிதம் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிப்ரவரியில் தொடங்கவுள்ளதாக இந்தப் படத்தினை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சாணிக் காயிதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.