தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் அயலான் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தடைபட்டுள்ளது.

இதனை அடுத்து தனது நெருங்கிய நண்பரும் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இயக்கத்தில் தயாராகி வரும் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.தெலுங்கில் கடந்த வருடம் நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன்.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.

டாக்டர் படத்தில் இருந்து சில புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.இந்த புகைபடங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தன.இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லம்மா என்ற பாடல் கடந்த ஜூலை 16ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.சமூகவலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது

ரௌடி பேபி,புட்ட பொம்மா உள்ளிட்ட பாடல்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடன இயக்குனர் ஜானி.இவர் இந்த பாடலுக்கு நடனமைக்கவுள்ளதாக நேற்று தெரிவித்தார்.ரிலீசானது முதல் இந்த பாடல் செம வைரலாகி வருகிறது.இந்த பாடலில் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் போட்ட ஸ்டெப்பை பலரும் ட்ரை செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த பாடல் சமீபத்தில் அதிகம் லைக் செய்யப்பட்ட சிவகார்த்திகேயன் பாடலாக ஒரு சாதனையை நிகழ்த்தியது.இதனை தொடர்ந்து இந்த பாடலின் லிரிக் வீடியோ 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

நேற்று யாரும் எதிர்பாராத வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஒவ்யை அறிவித்தார்.இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்களும்,பிரபலங்களும் தோனி குறித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.தோனியின் மிகப்பெரிய ரசிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன் ,தோனியின் ஒய்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் அதில், இத்தனை காலமாக எங்களை ஊக்கப்படுத்தி,எங்களை என்டேர்டைன் செய்ததற்கு நன்றி , நீங்கள் எப்போதும் மக்கள் போற்றும் ஒரு தலைவன் தான் , இன்னும் பல திட்டங்களோடு எங்களை ஆச்சரியப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்,உங்களுடைய அடுத்த ஹெலிகாப்டர் ஷாட்டிற்காக காத்திருக்கிறேன் என்று அவர் பதிவிட்டார்.

தென்மேற்கு பருவக்காற்று,தர்மதுரை உள்ளிட்ட படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இதற்கு பதிலளித்துள்ளார்.அதில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பலரையும் நீங்கள் ஊக்கப்படுத்தி,மகிழ்வித்து வருகிறீர்கள் , மேலும் பல புதுமுகங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் நீங்கள் வாய்ப்பளித்து உதவி வருகிறீர்கள்,நீங்கள் சினிமாவின் தோனி.இருவரும் கீழிருந்து மேலே வந்திருக்கிறீர்கள் என்று சிவகார்த்திகேயனை தோனியுடன் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் உங்கள் அன்பிற்கும்,வார்த்தைகளுக்கும் நன்றி , உங்கள் வார்த்தைகள் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது,இன்னும் கடினமாக உழைத்து ஒரு நல்ல மனிதனாகவும்,நடிகனாகவும் இருக்க முயற்சிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.இந்த ட்வீட் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.