இந்தியாவில் கோவிட்19 கொரோனா தொற்று பாதிப்பு, 22 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளன; 45,000-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். அத்துடன், உலகில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக மூன்றாவது நாடாக உள்ளது.

பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கும் இந்த நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படும் என்பது மருத்துவ உண்மை, இதை உணர்ந்து செயல்பட்டால், இந்த நோய் பரவல் ஓரளவு குறைவதற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும், ஒருவரிடமிருந்து எத்தனை பேருக்கு இந்த தொற்று பரவும் என்பது இப்போது வரை ஆய்வு நிலையிலேயே இருக்கிறது. இதுபற்றி, காந்தி நகரில் உள்ள இந்திய பொதுசுகாதார நிறுவனத்தில் (IIPH - ஐ.ஐ.பி.எச்) நடந்த உலகளாவிய கட்டுரை ஆய்வொன்றில், கொரோனா கண்டறியப்பட்ட நபரின் குடும்பத்தில் இருக்கும் 80-90% குடும்ப உறுப்பினர்கள், கோவிட்19 உருவாகவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் ஆசிரியரும் ஐ.ஐ.பி.எச் தலைவரும் இயக்குநருமான திலீப் மவலங்கருடன் அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி., ஜான் ஹாப்கின்ஸ் சுகாதாரம் மற்றும் பொது சுகாதார பள்ளியிலிருந்து பொது சுகாதாரத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்.

இவர் இந்த ஆய்வு இந்தியாவுக்கு மட்டும் பொருந்தாது என்றும், உலகம் முழுக்க இது பொருந்தும் எனக்கூறியுள்ளார். ``பெரும்பாலும் சீனா மற்றும் கொரியாவிலும் இதேபோலதான் கொரோனா பரவல் இருந்துள்ளன. அதேபோல் இங்கிலாந்து, இத்தாலி, அமெரிக்காவில் இருந்தும் சான்றுகள் உள்ளன. மாறுபாடு சிறிதளவு இருக்கலாம். சில ஆவணங்கள் 5% சார்ஸ்- ஐ காட்டின; ஒரு ஆவணம் 50% சார்ஸ்-ஐ சீனாவில் காட்டியுள்ளது. ஆனால் பெரும்பாலான ஆவணங்கள் 10-20% வரை காட்டுகின்றன. இந்தியாவில் ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் சுமார் 6-8% காட்டப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் 11% வரை உள்ளது

வீட்டுக்கு வெளியே பரவும் நோய் தொற்றின் இரண்டாவது மதிப்பாய்வை நாம் தற்போது செய்கிறோம். அடிப்படையில், நோய் பரவும் இரண்டு கோளங்கள் உள்ளன: வீட்டிற்குள், அந்த நபருடன் நீங்கள் 12-18 மணி நேரம் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளீர்கள், மற்றும் ஊரடங்கின் போது கிட்டத்தட்ட 24 மணிநேரம்; [அல்லது வீட்டிற்கு வெளியே] நீங்கள் ஒரு கடை, மால் அல்லது அலுவலகம் போன்ற நெருக்கமான இடத்தில் வெளியே செல்லும்போது, [வெளிப்பாடு] மிகவும் குறைவாக இருக்கலாம். அங்கு, சூப்பர் ஸ்ப்ரெடர் மற்றும் சூப்பர்ஸ்பிரெடிங் நிகழ்வுகள் [காணப்படுகின்றன]. அமெரிக்காவில் வாஷிங்டன் மாநிலத்தில் ஒரு பாடகர் குழு பற்றி விவரிக்கும் ஆவணங்கள் வந்துள்ளன, அங்கு இரண்டு மணி நேர பாடகர் பயிற்சிக்கு வந்த 60 பேரில் 55 பேர், ஒருவரிடம் இருந்து தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்" எனக்கூறியிருக்கிறார் அவர்.

இதேபோல, ஆசிய மற்றும் ஓசேனியாவின் மருத்துவ அமைப்பு (Medical association of Asia and Oceania - CMAAO).
செய்த ஆய்வில், மூன்று அறிகுறியுள்ள நபர்களுக்கு ஆசிய கண்டத்தில் கொரோனா உறுதிசெய்யப்பட்டால், அதற்கு பின் 100 அறிகுறியற்ற நோயாளிகள் மறைந்துள்ளனர் என்று அர்த்தம் எனக்கூறப்பட்டுள்ளது.

இதிலுமேகூட, இந்தியாவுக்கென தனியாக ஒரு மருத்துவ அறிக்கையை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், இந்தியாவில் ஒரு அறிகுறியுள்ள நோயாளிக்கு, 30 அறிகுறியற்ற நோயாளிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்த 30 பேரில், 20 பேருக்கு, தங்களுக்கு கொரோனா இருப்பதே தெரியாமல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் மருத்துவ வசதிகள் போதாமையாக இருப்பதும், அதனால் கான்டாக்ட் ட்ரேசிங் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவற்றோடு சேர்த்து, மக்களிடம் விழிப்புஉணர்வு இல்லை என்றும் கூறப்படுகிறது. மக்கள் மத்தியில் கொரோனா பற்றிய சரியான புரிதல் இல்லை என்ற காரணத்தினால், இது அதிகம் பரவுகிறது என ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது.