சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவான படம் இடம் பொருள் ஏவல். 2014 ஆண்டில் படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கு தயாரானது. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்தார். லிங்குசாமி இந்த படத்தை தயாரித்திருந்தார். சில காரணங்களால் இப்படம் திரைக்கு வராமல் போனது. 

Seenu Ramasamy About Idam Porul Yeaval Release

தற்போது ஆறு வருடங்கள் கழித்து இடம் பொருள் ஏவல் படத்திற்கு விடிவுகாலம் வந்துவிட்டது. கொரோனா லாக்டவுன் காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இயல்பு நிலை திரும்பியவுடன் படம் வெளியாகும் என்ற தகவல் தெரியவந்தது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து செய்தி வெளியானது. 

Seenu Ramasamy About Idam Porul Yeaval Release

அதனை உறுதி செய்யும் விதத்தில் இயக்குனர் சீனு ராமசாமி ட்விட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் சூதர்மனைதனில் உருவப்படும் சேலையை பற்றாமல் தன் இரண்டு கைகளையும் உயர்த்திக், கிருஷ்ணா கிருஷ்ணா எனப் பதறிய திரவுபதியின் மனநிலையில் சிக்குண்ட எமக்கு ஆறுதல்.இது திரைப்படந்தான் ஆனால் எனக்கு பிள்ளை,இயக்குநர் திரு,லிங்குசாமிக்கு நன்றி இடம் பொருள் ஏவல் வெளியீடு என சீனு ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.