எதார்த்தமான டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் சதீஷ். 2006-ம் ஆண்டு ஜெர்ரி படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கியவர், பல படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர்த்து சசிகுமார் நடிக்கும் ராஜவம்சம், ஜெயம் ரவியுடன் பூமி, ஆர்யா நடிக்கும் டெடி போன்ற படங்களில் நடித்துள்ளார். 

கொரோனா காரணமாக வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள திரை பிரபலங்களில் சதீஷும் ஒருவர். படப்பிடிப்பு எங்கேயும் செல்லாமல் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ளனர். சமீபத்தில் கொரில்லா படப்பிடிப்பு தளத்தில், ஸ்டண்ட் காட்சியின் போது டூப் ஆர்ட்டிஸ்ட் நடித்த காட்சியை வீடியோ பதிவு செய்து பகிர்ந்தார் சதீஷ். இந்த வீடியோ இணையவாசிகள் விரும்பும் வகையில் அமைந்தது. 

இந்த லாக்டவுன் நடிகர் சதீஷுக்கு ஸ்பெஷல் என்றே கூறலாம். நேரம் கிடைக்கையில் லைவ்வில் தோன்றி தனது திரைப்பயணம் பற்றியும், முன்னணி நடிகர்களுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் பகிர்ந்து கொண்டார். வீணை வாசிப்பது, தந்தைக்கு ஷேவிங் செய்வது என பல வீடியோக்கள் வெளியிட்டு அசத்தி வருகிறார். லாக்டவுன் முடிந்து படப்பிடிப்புகள் துவங்கினால், சூப்பர்ஸ்டார் நடிக்கும் அண்ணாத்த படத்தின் மீதம் உள்ள படப்பிடிப்பில் நடிக்கவுள்ளார் சதீஷ். 

சில நாட்கள் முன்பு ஃபேஸ்ஆப் மூலம் நடிகர் சதீஷை டாம் க்ரூஸ் போல் மாற்றி வீடியோவை பகிர்ந்தனர் சதீஷ் ரசிகர்கள். இணையவாசிகளின் செல்ல பிள்ளையான சதீஷின் ட்வீட்டுக்கென ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில் நடிகர் பிரசன்னாவின் பிறந்தநாளில் தனது பதிவின் மூலம் புது குண்டை போட்டுள்ளார். பிரசன்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

பிரசன்னாவின் நெருங்கிய நண்பரான நடிகர் சிபிராஜ் அசத்தலான பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில் நான் கேரவான் பகிர்ந்த ஒரே நபர் என்றால் அது பிரசன்னா தான். அதனுள் அடங்கியிருக்கும் அனைத்து ரகசியங்களும் அப்படியே செல்லட்டும். பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சி என்று ட்வீட் செய்துள்ளார். இதில் புகுந்த சதீஷ், அந்த கேரவானில் நடந்த அனைத்து விஷயங்களும் எனக்கு தெரியும். கவலை வேண்டாம்... நான் யாரிடமும் கூற மாட்டேன் என்று கமெண்ட் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், சினேகா அக்காவிடமும் சொல்ல மாட்டேன் என்று அவர் ஸ்டைலில் கமெண்ட் செய்துள்ளார். 

இதைக்கண்ட ரசிகர்கள் அப்படி என்ன கேரவான் ரகசியம் என்று சிந்தனை செய்து வருகின்றனர். நடிகர் பிரசன்னா மற்றும் சிபிராஜ் நாணயம் படத்தில் இணைந்து நடித்திருப்பார்கள். அப்போது ஏதாவது நடந்திருக்கலாம் என்றும் ஹிண்ட் தந்துள்ளனர் நெட்டிசன்கள். எதுவாக இருக்கட்டும் 5 ஸ்டார் துவங்கி இன்று D43 திரைப்படம் வரை நம்மை என்டர்டெயின் செய்து வரும் நடிகர் பிரசன்னாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்வதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.