பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு புது சர்ப்ரைஸ்... அசத்தலான "BIGGBOSS FANS ZONE"! விவரம் உள்ளே

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் அறிமுகமாகும் BIGGBOSS FANS ZONE,biggboss tamil season 7 introducing fans zone for new polling | Galatta

வழக்கம்போல் இந்த முறையும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில், கூல் சுரேஷ் (நடிகர்), பவா செல்லதுரை (எழுத்தாளர், பேச்சாளர்) , விசித்ரா (நடிகை), விஷ்ணு (சின்னத்திரை நடிகர்),  வினுஷா தேவி (சின்னத்திரை நடிகை), பிரதீப் ஆண்டனி (நடிகர்), அக்ஷயா உதயகுமார் (நடிகை லவ் டுடே), ஐஷு (நடனக்கலைஞர்), சரவண விக்ரம் (சின்னத்திரை நடிகர் பாண்டியன் ஸ்டோர்ஸ்), ஜோவிகா விஜயகுமார் (வனிதா விஜயகுமாரின் மகள்), யுகேந்திரன் (பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன்), ரவீனா தாஹா (சின்னத்திரை நடிகை), மணி சந்திரா (நடன இயக்குனர்), விஜய் வர்மா (நடன இயக்குனர்), பூர்ணிமா ரவி (நடிகை), மாயா கிருஷ்ணன் (நடிகை), அனன்யா S ராவ் (இன்ஸ்டாகிராம் பிரபலம்) என 18 போட்டியாளர்கள் களமிறங்கி இருக்கின்றனர். வழக்கத்தை விட இந்த முறை நிறைய சர்ப்ரைஸான விஷயங்கள் நிறைந்திருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த சர்ப்ரைஸாக “BIGGBOSS FANS ZONE” ஒன்றை கொண்டுவந்துள்ளனர். இது குறித்து விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், 

"இந்த வருடத்தின் பயங்கர பரபரப்பான ஒரு பகுதிக்கு தயாராகுங்கள் ஏனென்றால் ஸ்டார் விஜய் பெருமையுடன் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 ஐ Oct 1 6 PM இல் இருந்து பெருமையுடன்  தொடங்குகிறது. இதுவரை நாங்கள் செய்திருக்கும் அனைத்து ரெக்கார்டுகளையும் உடைத்து பொழுதுபோக்கை ஒரு புது உயரத்துக்கு எடுத்துச் செல்ல போகிறோம். இந்தப் பகுதி களத்தை இன்னும் விறுவிறுப்பாக்க இருக்கிறது. ஏனென்றால் இம்முறை ஒரு வீடல்ல இரண்டு பிக் பாஸ் வீடுகள். நிறைய வருடங்களாக பிக் பாஸ் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் இடம் பிடித்திருக்கிறது. நிறைய தருணங்களை கொடுத்திருக்கிறது. முதல் முறையாக பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இரண்டு வீடுகளில் நடைபெறுகிறது. அதன் மூலம் இரட்டிப்பு சந்தோஷம் இரட்டிப்பு பொழுதுபோக்கு இரட்டிப்பு உற்சாகம் என எல்லாவற்றையும் இரட்டிப்பாக தரப்போகிறது. இந்தப் பகுதியின் மீதான எதிர்பார்ப்பு ப்ரோமோவின் ரிலீசுக்கு பிறகு ஜாஸ்தியாகவே இருந்தது. இந்தப் பகுதியின் ப்ரோமோ 25 மில்லியன் வியூஸ்களை கடந்தது. இந்த நிகழ்ச்சி மிகப் பிரபலம் என்பதை தாண்டி, இதன் வெற்றிக்கான ஒரு முக்கிய பங்கு பங்கேற்பாளர்களின் தனித்துவத்தை ரசிகர்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. வெளி உலகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருக்கும் பொழுது இவர்கள் தனிப்பட்ட உணர்ச்சிகளுக்குள் தள்ளப்படுகிறார்கள். மிகக் கடினமான ஒரு தேர்ச்சி முறையைக் கடந்து ஆழ்ந்த கண்காணிப்பும் அவரவர்களின் திறமையை வெளிக்காட்டும் உறுதி மொழியையும் தனிப்பட்ட யுக்திகளையும் அவர்களின் உண்மையான உணர்வுகளையும் வெளிக்காட்டுவோம் என்ற உறுதியின் பின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 

"BIGGBOSS FANS ZONE": 
"BIGGBOSS FANS ZONE" என்பது பிக் பாஸ் ரசிகர்களுக்காக Disney+Hotstarல் உருவாக்கப்பட்ட புதிய வாக்கெடுப்பு தளம். இது நிகழ்ச்சிக்கு ஒரு சிறந்த விறுவிறுப்பான மற்றும் கலந்துரையாடும் தளத்தை அளிக்கிறது. பார்வையாளர்களை அவரது கருத்துக்களை வெளிக்காட்டவும் ஒரு சில நிகழ்வுகளை அரங்கேற்றவும் உதவுகிறது. Disney+ Hotstar ல் பதிவு செய்த பார்வையாளர்கள் பிக் பாஸ் ரசிகர்கள் ZONE-ல் வாக்கெடுப்பில் தினசரி ஒரு கணக்கில் இருந்து ஒருவேளை மட்டும் பங்கேற்கலாம். பிக் பாஸ் ரசிகர் மன்ற வாக்கெடுப்பு 2023 டிசம்பர் 31 2023 வரை நடைபெறும். பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அக்டோபர் 1ஆம் தேதி 2023 அன்று ஸ்டார் விஜய்-ல் வெளியாக இருக்கிறது. Disney+Hotstar தளத்தில் நீங்கள் ஒரு நிமிடம் கூட எந்த விதமான ஆச்சரியமான நிகழ்வுகளையும் விட்டு விடாத படி முழு நேரமும் ஒளிபரப்பாக இருக்கிறது.”

என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த "BIGGBOSS FANS ZONE" மூலமாக இன்னும் விறுவிறுப்பாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
sivakarthikeyan in ayalaan movie teaser release announcement