தமிழ் திரையுலகின் மிக முக்கிய இயக்குனரும் சிறந்த நடிகருமான சமுத்திரக்கனி இயக்கி நடித்து கடைசியாக வெளிவந்த வினோதய சித்தம் திரைப்படம் மனித உணர்வுகளையும் மனதையும் தொட்டுப் பேசும் அழகான திரைப்படமாக நேரடியாக ZEE5 ஒரிஜினல் OTT தளத்தில் கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனைத்தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான RRR, சிவகார்த்திகேயனின் டான்,தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா மற்றும் ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கான பீம்லா நாயக் ஆகியப் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக சமுத்திரக்கனியின் நடிப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட யாவரும் வல்லவரே திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்க யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ரித்விகா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் N.A.ராஜேந்திர சக்கரவர்த்தி எழுதி இயக்கியுள்ள யாவரும் வல்லவரே திரைப்படத்தை 11:11 புரொடக்ஷன்ஸ் மற்றும் THEE COMMITY PICTURE இணைந்து தயாரிக்க, JAIS ஒளிப்பதிவில் N.R.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது யாவரும் வல்லவரே படத்தின் டீசர் வெளியானது. சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.