தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் சிறந்த தயாரிப்பாளராகவும் வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன் அவர்கள் தயாரிப்பில் உருவாகி வருகிறது எதற்கும் துணிந்தவன் திரைப்படம்.

தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. முன்னதாக இயக்குனர் த.சே.லஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி வெளியீடாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது.

மலை கிராமங்களில் வசிக்கும் மக்களை மையப்படுத்திய கதை களத்தில் நகரும் திரைப்படமான ஜெய்பீம் திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. S.R.கதிர் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

நடிகர் சூர்யாவுடன் இணைந்து மணிகண்டன், பிரகாஷ்ராஜ், லிஜோமொள் ஜோஸ் மற்றும் ராஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ள ஜெய்பீம் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான “பவர்” மற்றும் “தல கோதும்” பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த பாடலாக தற்போது வெளியானது “செண்டுமல்லி”. மனதை வருடும் இந்த செண்டுமல்லி பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.