விக்ரம் வேதா, கைதி போன்ற படங்களின் மூலம் தனது இசையால் ஈர்த்தவர் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பின்னணி இசையில் பின்னி பெடலெடுக்கும் இவர் தற்போது சசிகுமார் நடிக்கும் ராஜவம்சம், ரெஜினா நடிக்கும் சூர்ப்பனகை போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். 

SamCS

இந்நிலையில் சாம் சி.எஸ். வேகமாக பரவிவரும் கொரோனாவிற்கு, மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக கோபமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Samcs

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், ஒரு நோயின் பயங்கரம், தனி மனித கட்டுப்பாடு, பிறர் நலன் என எந்த பொறுப்பும் இல்லாத கேவலமான சமூகத்தில் வாழ்வது வேதனையளிக்கிறது என பதிவு செய்துள்ளார். எல்லாத்தயும் இழுத்து மூடுங்க, சொன்னா கேக்குற மாதிரி தெரியல எனவும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த தருணத்தில் அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் மற்றும் தமிழக அரசாங்கத்தை நினைத்தால் பெருமையாக உள்ளது என புகழாரம் சூட்டியுள்ளார். இசையமைப்பாளரின் கோபம் நியாயம் தானே... என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.