தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்து உருவாகிய திரைப்படம் மாஸ்டர். XB ஃபிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

MasterVijay

சில தினங்கள் முன்பு மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் சென்னை லீலா பேலஸில் அசத்தலாக நடைபெற்றது. வழக்கம் போல் தளபதியின் பேச்சுக்கு அரங்கமே அதிர்ந்தது. பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இன்று காலை அவன் கண்ண பாத்தாக்கா லிரிக் வீடியோ வெளியாகி சக்கை போடு போட்டது. யுவன் ஷங்கர் ராஜா இந்த பாடலை பாடியுள்ளார். 

Master shanthanu

படத்தின் ட்ரைலர் எப்போது ? படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். படக்குழுவினரால் விரைவில் மாஸ்டர் அப்டேட் வரும் என்று நடிகர் ஷாந்தனு பதிவு செய்துள்ளார். அதுவரை பொறுமையாகவும், வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொண்டார். அவசியம் இருந்தால் மட்டுமே வெளியே செல்லுமாறு அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.