தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிஸியான நடிகை காஜல் அகர்வால். கடந்த 2008-ம் ஆண்டு பழனி திரைப்படம் மூலம் தமிழில் கால்பதித்தவர், இன்று கோலிவுட்டின் தேவதையாக ஜொலித்து வருவதற்கு முக்கிய காரணம் இவரது இயல்பான நடிப்பு. பிற மொழி படங்களில் பிஸியாக இருந்தவர் கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். 

KajalAgarwal

தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிருந்தா இயக்கவிருக்கும் ஹே சினாமிகா படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்பும் மார்ச் 31-ம் தேதி ஓத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் பிரபலங்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் 24 மணிநேரம் வசித்து வருகின்றனர். 

Kajal Agarwal

இந்நிலையில் காஜலிடம், தளபதி விஜய் குறித்து ரசிகை எழுப்பிய கேள்விக்கு அசத்தலான பதிலை கூறியுள்ளார். விஜய் என்னுடைய ஃபேவரைட் கோ-ஸ்டார். அவரோடு விரைவில் படம் பண்ணுவேன் என்று கூறியுள்ளார். விஜய் மற்றும் காஜல் காம்போவில் இதுவரை வெளியான துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் ஆகிய அனைத்து படங்களும் ஹிட் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆங்காங்கே துப்பாக்கி 2 என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்வதை பார்க்க முடிகிறது.