தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.

சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்கு என்றும் தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது அனைவரும் அறிந்ததே.பல சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்து விட்டன.கொரோனா தாக்கம் காரணமாக சில தொடர்கள் எந்த காரணமுமின்றி கைவிடப்பட்டன.தொடர்கள் முடிக்கப்பட்டாலும் ரசிகர்கள் மனதை கவரும் படி புதிய சீரியல்களை சன் டிவி நிறுவனம் ஒளிபரப்பி வருகின்றது.

சன் டிவியில் சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பை தொடங்கிய  பிரபல சீரியல்களில் ஒன்று திருமகள்.Harika Sadu இந்த தொடரின் நாயகியாக நடித்துள்ளார்.சுரேந்தர் இந்த தொடரின் நாயகனாக
நடித்துள்ளார்.ஷமிதா,நிவேதிதாஉள்ளிட்டோர் இந்த தொடரில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தனர்.

தற்போது இந்த தொடரில் முக்கிய வில்லி வேடத்தில் நடித்து அசத்தி வந்த ஷமிதா சில காரணங்களால் விலகுகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது,இவருக்கு பதிலாக தெய்வமகள் தொடரில் நடித்து அசத்திய ரேகா இந்த தொடரில் நடிக்கிறார்.