நாடு முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றுவது மூலம் தான் பரவலை தடுக்க இயலும். இப்படிப்பட்ட சூழலில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் சினிமா, கிரிக்கெட் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாமல் தவிக்கின்றனர். குறிப்பாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறாமல் போனது. இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகம் எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Ravichandran Ashwin Replies Fan In Muthu Style

போட்டிகள், பயிற்சிகள் இல்லாமல் வீட்டில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் மீண்டும் எப்போது சென்னை சூப்பர் கிங்ஸ்காக விளையாடுவீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு விடுகதையா இந்த வாழ்க்கை என்று பதிலளித்தார் அஸ்வின். 

Ravichandran Ashwin Replies Fan In Muthu Style

விடுகதையா இந்த வாழ்க்கை என்ற பாடல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடிய அஸ்வின், அதன் பிறகு பஞ்சாப் அணிக்கு விளையாடினார். தற்போது டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு விளையாடவுள்ளார்.