உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர். திரைப்பிரபலங்களும் அவர்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் கேரள முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Raghava Lawrence Requests Kerala CM For Help

மாண்புமிகு கேரள முதல்வருக்கு வணக்கங்கள், கொரோனா தொற்று மீட்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து தாங்கள் செய்துவரும் அரும்பணியை கண்டு வியக்கிறேன். ஒருமுறை எனது தாயாருடன் தங்களை சந்தித்து நிவாரணத்தொகை வழங்கியதையும் பெருமையாக கருதுகிறேன். ஒரு சிறிய வேண்டுகோளை தங்களிடம் முன்வைக்கிறேன். 

Raghava Lawrence Requests Kerala CM For Help

திருவனந்தபுரத்தில் உள்ள NIMS மருத்துவமனையில் தமிழகத்தை சேர்ந்த வறுமையில் வாடும் பத்திரிகையாளர் அசோக் என்பவரின் தாயார் முடக்குவாதத்தால் அனுமதிக்கப்பட்டு, நேற்று மாலை மருத்துவமனையிலேயே  உயிரிழந்த நிலையில், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து, தமிழகத்தில் கன்னியாகுமரி சுசீந்திரம் பகுதிக்கு எடுத்துச்செல்ல வேண்டும். கொரோனாவால் அவரால் மருத்துவமனைக்கு செலுத்தவேண்டிய ஒன்றரை லட்சம் பணத்தை செலுத்த முடியாமல் தவிக்கிறார். 

அசோக் என்பவர் தாயை இழந்து கதறுவது குறித்து, மூத்த பத்திரிகையாளர் கொ.அன்புகுமார் அவர்களின் மூலம் எனது உதவியாளர் புவனிடம் இருந்து சம்ந்தபட்ட நபரின் ஆடியோவை கேட்டு மிகுந்த துயருற்றேன்... ஒரு சிறிய வேண்டுகோளாக அவரது தாயாரின் உடலை மருத்துவமனையிலிருந்து தமிழகம் எடுத்துச்செல்ல உடனடியாக தாங்கள் அனுமதிக்க வேண்டும்... அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன். மருத்துவமனைக்கு செலுத்தவேண்டிய பணத்தை ஓரிரு நாளில் நானே செலுத்திவிடுகிறேன் என்பதையும் தெரிவிக்கிறேன் என தனது நன்றியை தெரிவித்தார்.