டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. தற்போது சியான் விக்ரம் வைத்து கோப்ரா படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Ajay Gnanamuthu Clarifies On Cobra Shoot Update

கே.ஜி.எஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். கிரிக்கெட்டர் இஃர்பான் பதான் வில்லனாக அறிமுகமாகிறார். டப்ஸ்மேஷ் புகழ் மிர்னாலினி ரவி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீதம் உள்ளது. கொரோனா காரணமாக இதன் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

Ajay Gnanamuthu Clarifies On Cobra Shoot Update Ajay Gnanamuthu Clarifies On Cobra Shoot Update

இதனிடையே ட்விட்டர் வாசி ஒருவர் படம் குறித்த தவறான செய்தியை பரப்பினார். அதாவது ரஷ்யாவில் எடுக்கவிருக்கும் காட்சிகளை சென்னையிலே கிரீன் மேட் கொண்டு எடுக்கவுள்ளனர் என்ற வதந்தியை கிளப்பினார். இச்செய்தி தவறு என்று இயக்குனர் அஜய் ஞானமுத்து பதிலளித்துள்ளார்.