நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சென்னை திருவெற்றியூர் பகுதியில் தான், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீர் என்று, மயங்கி விழுந்திருக்கிறார்.

அதாவது, சென்னை திருவெற்றியூரில் உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதிகள், அரசு சார்பில் இடிக்கப்பட்டு வந்து உள்ளது. 

அப்போது, ஆக்கிரமிப்பு பகுதிகளை இடிப்பதை கண்டித்து பொது மக்கள் அங்கு பெரும் அளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட அந்த பகுதி மக்களுக்கு ஆதரவு தரும் வகையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அங்கு விரைந்து சென்று உள்ளார். 

அங்கு, பொது மக்களுடன் சேர்ந்து, அவரும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அங்கு செய்தியாளர்களை சந்தித்த சீமான், பேட்டி அளித்துக்கொண்டு இருந்தார். 

அந்த நேரம் பார்த்து, சீமான் திடீரென்று, அங்கு மயங்கி விழுந்தார். இதனால், அங்கு பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

உடனடியாக, சீமானின் முகத்தில் தண்ணீர் அடிக்கப்பட்டு, அவருக்கு முதல் உதவியும் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சம்ப இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அத்துடன், ஆம்புலன்ஸில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு சீமான் அனுப்பி வைக்கபட்டார். 

அங்கு, சீமானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வருவதாகவும் அங்கிருந்து வந்த முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன.

அத்துடன், சீமானுக்கு தொடர்ந்து உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது முழு உடல் நலத்துடன் சீமான் வீடு திரும்பி உள்ளார் என்றும், கூறப்படுகிறது. 

மேலும், கடும் வெயில் காரணமாகவே, சீமானுக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் அவர் தரப்பிலிருந்து காரணங்கள் கூறப்படுகிறது. 

குறிப்பாக, சீமான் மயங்கி விழுந்த வேகத்தில், அங்கு கூடியிருந்த நாம் தமிழ் கட்சியினர் அளித்த முதல் உதவியிலேயே சீமான் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாகவும், அதன் பிறகே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் தற்போது வீடு திரும்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, மேற்கொண்டு ஓய்வெடுக்க சீமான் தற்போது, அவரது வீட்டில் உள்ளார்.

முக்கியமாக, சீமானின் செய்தியாளர்கள் சந்திப்பானது, நேரலையாக நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் நேரலையில் ஒளிப்பரப்பாகிக்கொண்டு இருந்தது. அதில், சீமான் செய்தியாளர்களை சந்திப்பு முடித்துவிட்டு, தனது சட்டையில் இருந்த மைக்கை கழட்டும்போது அவர் அப்படியே கீழே சரிந்து விழுவது அதில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.