தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் சமீபத்தில் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படம் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது..இதனை தொடர்ந்து இவர் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார்.

Ramya Krishnan About Vijay Devarakonda Fighter Movie

இந்த படத்தினை பூரி ஜெகன்நாத்,சார்மீ,கரண் ஜோகர் உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர்.இந்த படத்தில் அனன்யா பாண்டே,ரம்யா கிருஷ்ணன்,ரோனித் ராய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு ஃபைட்டர் என்று பெயரிட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Ramya Krishnan About Vijay Devarakonda Fighter Movie

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவரும் ரம்யாகிருஷ்ணன்,இந்த படம் குறித்த முக்கிய தகவலை சமீபத்தில் பிரபல மீடியாவுடனான இன்டெர்வியூவில் பகிர்ந்துகொண்டார்.அவர் கூறியதாவது ஃபைட்டர் கிட்டத்தட்ட பாகுபலி போன்ற ஒரு படம் தான்.கிட்டத்தட்ட 50% ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது கொரோனா முடிந்து நிலைமை சரியானதும் மீதி ஷூட்டிங் நடைபெறும் என்று தெரிவித்தார்.படத்தின் கதை மிகவும் நன்றாக இருப்பதாகவும்,அவருக்கும் விஜய்க்குமான எமோஷனல் காட்சிகள் நன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Ramya Krishnan About Vijay Devarakonda Fighter Movie