இந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன என்பது பற்றி ஒரு ஒப்பிடு பார்வையை தற்போது பார்க்கலாம். 

இந்திய - சீன எல்லையில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், சீனா தரப்பில் 43 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், இந்திய - சீன எல்லையில் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Indian Army China Armed forces total strength

இந்நிலையில், இந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன என்பதனை தற்போது ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

இந்தியா சுமார் 33 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் - சீனா சுமார் 96 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் கொண்ட உலகின் மிகப்பெரிய நாடுகள்.

இந்தியா - சீனா இரண்டுமே உலகிலேயே அதிகபட்ச மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சம அளவு கொண்ட நாடுகளாகத் திகழ்கிறது. 

இந்தியா - சீனா ஆகிய இரண்டு நாடுகளுமே, உலகின் மிகப்பெரிய ராணுவ பலத்தைக் கொண்டுள்ள நாடுகளாகத் திகழ்கிறது.

Indian Army China Armed forces total strength
 
இந்தியா, தனது ராணுவத்திற்காக ஆண்டுக்கு 4 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கிறது - சீனா ஆண்டுக்கு 17 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்கிறது. 

இந்தியாவில் 21 லட்சத்து 40 ஆயிரம் வீரர்கள் ராணுவத்தில் உள்ளனர் - சீனாவில் 23 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். 

இந்தியாவில் 4,426 ராணுவ டாங்கிகளும் - சீனாவிடம் 7,760 ராணுவ டாங்கிகளும் உள்ளன. 

இந்தியாவில் 5681 கவச வாகனங்களும் - சீனாவிடம் 6 ஆயிரம் கவச வாகனங்களும் உள்ளன. 

இந்தியாவில் 5067 பீரங்கிகளும் - சீனாவிடம் 9726 பீரங்கிகளும் உள்ளன.

இந்தியாவிடம் 290 தானியங்கி பீரங்கிகளும் - சீனாவிடம் 1,710 தானியங்கி பீரங்கிகளும் உள்ளன. 

Indian Army China Armed forces total strength

இந்திய ராணுவத்தில் 2216 விமானங்களும் - சீன ராணுவத்தில் 4182 விமானங்களும் உள்ளன. 

இந்தியாவில் 323 போர் விமானங்களும் - சீனாவில் 1,150 போர் விமானங்கள் உள்ளன. 

இந்தியாவில் தாக்குதல் விமானங்கள் 220 உள்ளன - சீனாவில் 270 தாக்குதல் விமானங்கள் உள்ளன. 

இந்தியாவில் ராணுவ ஹெலிகாப்டர்கள் 725 உள்ளன - சீனாவில் ராணுவ ஹெலிகாப்டர்கள் 1,170 உள்ளன.

இந்தியா கடற்படையில் 214 கப்பல்கள் உள்ளன - சீனாவில் 780 கப்பல்களும் உள்ளன. 

இந்தியாவில் 2 போர் விமானங்களைத் தாங்கி நிற்கும் கப்பல்களும் - சீனாவிடம் இரண்டும் உள்ளன. 

இந்தியாவில் தாக்கி அழிக்கும் வெடிகுண்டு கப்பல்கள் 11 உள்ளன - சீனாவிடம் 36 உள்ளன. 

இந்தியாவில் 15 போர்க்கப்பல்கள் உள்ளன - சீனாவில்  54 உள்ளன.

இந்தியாவிடம் 15 நீர்மூழ்கிக்கப்பல்கள் உள்ளன - சீனாவிடம் 76 நீர்மூழ்கிக்கப்பல்களும் உள்ளன.

இதனிடையே, “இந்தியாவை விட சீனா மற்றும் பாகிஸ்தானில் அதிக எண்ணிக்கையிலான அணு ஆயுதங்கள் உள்ளதாக” சுவீடனைச் சேர்ந்த சர்வதேச அமைதிக்கான ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.