பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் தனுஷுடன் ஜகமே தந்திரம் படத்தில் இணைந்தார்.2016-லேயே தொடங்க வேண்டிய இந்த படம் சில காரணங்களால் தள்ளி போனது.Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடித்துள்ளார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்,இந்த படத்தில் கலையரசன்,மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்,சஞ்சனா நடராஜன்,ஜேம்ஸ் காஸ்மோ,அஸ்வந்த்,வடிவுக்கரசி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் கொரோனா காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக  Netflix தளத்தில் ஜூன் 18ஆம் தேதி வெளியானது.ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது இந்த படம்.தனுஷின் நடிப்பை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.தற்போது இந்த படத்தின் சூப்பர்ஹிட் ஓப்பனிங் பாடலான ரகிட ரகிட ரகிட பாடலின் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்