அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
By Aravind Selvam | Galatta | September 09, 2021 12:23 PM IST
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக 2020 பொங்கலுக்கு வெளியான தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து விஸ்வாசம் பட இயக்குனர் சிவா இயக்கத்தில் தயாராகி வந்த அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்த படத்தில் நயன்தாரா,சதிஷ்,சூரி,கீ
கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தடைபட்டது.பின்னர் முக்கால்வாசி ஷூட்டிங் முடிக்கப்பட்டு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த பர்ஸ்ட்லுக் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
#Annaatthe thiruvizha aarambam!#AnnaattheFirstLook Tomorrow @ 11 AM | #AnnaattheMotionPoster Tomorrow @ 6 PM@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #AnnaattheFLTomorrow pic.twitter.com/RTOr8SFqWE
— Sun Pictures (@sunpictures) September 9, 2021