"ஆயிரத்தில் ஒருவனுக்கு பின் இது தான்!"- சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான் பட சவால்கள் குறித்து மனம் திறந்த ஜீவி பிரகாஷ்! வீடியோ இதோ

சீயான் விக்ரமின் தங்கலான் பட சவால்கள் குறித்து மனம் திறந்த ஜீவி பிரகாஷ்,gv prakash kumar shared the challenges of thangalaan movie | Galatta

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தங்கலான் திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் தங்கலான் திரைப்படத்தின் சவால்கள் குறித்து இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் இன்று நடைபெற்ற டீசர் வெளியிட்டு விழாவில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அப்படி பேசும் போது,

“தங்கலான் படத்துடைய பின்னணி இசை... இந்திய பழங்குடி இசையையும் ஒரு சர்வதேச இசையையும் சேர்த்து உலக தரத்தில் ஒன்று பண்ணலாம் என்று முயற்சி செய்திருக்கிறேன். வழக்கமாக ட்ரம்பட்டுகள் வாய்ஸ்கள் பயன்படுத்துவோம் ஆனால் இந்த முறை டீசரில் ஒரு LOW BASE செலோ பயன்படுத்துவோம் ஒரு வழக்கமான இசைக்கருவியாக இல்லாமல் இதை வைத்து செய்தோம். அதையும் பலர் பார்த்து குறிப்பிட்டு சொல்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இந்த படத்திற்கு ஒரு சத்தத்தை வைப்பது என்பது சவாலானதாக இருக்கிறது. தங்கலான் படம் ஒரு கோல்டன் டீம் என்று சொல்வேன் ஏனென்றால் எல்லாருடைய பணியும் அட்டகாசமாக இருக்கிறது என்னுடையது மட்டுமல்ல. கலை இயக்குனர், ஒளிப்பதிவாளர், ஆடை வடிவமைப்பாளர், உதவி இயக்குனர்கள் எல்லோருமே  தங்களுடைய பெஸ்டை கொடுத்திருக்கிறார்கள். இது எல்லாருடைய பெஸ்ட் ஷோகேஸாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.  விக்ரம் சார் உடைய நடிப்பு மிகப் பிரமாதமாக இருக்கிறது இந்த படத்தில்... அவர் எல்லா படத்திற்கும் மெனக்கெடுவார்.. ஆனால் இந்த கதைக்களம் வந்து இன்னும் சவால்களை கொடுத்து விட்டது. இந்தியாவின் கிறிஸ்டியன் பேல் மாதிரி ஒன்று பண்ணுகிறார். பயங்கரமாக பண்ணியிருக்கிறார் கண்டிப்பாக உலக அளவில் அங்கீகாரம் இந்த படத்திற்காக அவருக்கு கிடைக்க வேண்டும். ஏற்கனவே கிடைத்திருக்கிறது அதில் என்னவெல்லாம் கிடைக்க வில்லையோ அதெல்லாம் சேர்த்து இந்த படத்தில் கிடைக்க வேண்டும். இயக்குனர் ரஞ்சித் சார் பொருத்தவரை ஒவ்வொரு படத்திலும் அந்தப் படத்திற்கு தகுந்த மாதிரி அந்த காட்சி அமைப்புகளும் இயக்கமும் அசாத்தியமாக இருக்கிறது. ஒரு ஒரு படத்திற்கும் ஒரு லெவல் மேலே போய்க்கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு படம் பார்க்கும் போதும் அவருடைய காட்சி அமைப்பு ரொம்ப நன்றாக இருக்கிறது. இவர் இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இந்த படத்திற்காக உலக அளவில் அவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். மேலும் அவர் ரொம்ப கூலாக இருப்பார். ஒரு சிலரோடு பணியாற்றும் போது அவர்கள் ரொம்ப பதட்டமாக இருப்பார்கள் குழப்பத்தோடு இருப்பார்கள் அல்லது நம்மை குழப்பி விடுவார்கள். இவர் ரொம்ப தெளிவாக ரொம்ப சில்லாக தோனி மாதிரி இருக்கிறார். எதற்குமே அசர மாட்டார். அதனால் அவரோடு பணியாற்ற எனக்கு மிகவும் பிடிக்கும். ஒருவரை நம்பி விட்டார் என்றால் அவருக்கான இடம் கொடுப்பார். இதற்கு முன்பு அனுராக் கஷ்யப் இடம் இதை நான் உணர்ந்திருக்கிறேன். என் வாழ்க்கையை உன்னிடம் கொடுத்து விட்டேன் அவ்வளவு நீ பார்த்துக் கொள் என்கிற மாதிரி இருக்கும். அப்படி ஒரு நம்பிக்கையை ஒரு இயக்குனர் நமக்கு கொடுக்கும்போது... இந்தப் படத்திற்கு பின்னணி இசை கோர்ப்பது மிகவும் கடினமான ஒரு வேலையாக இருக்கிறது. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு எனக்கு மிகவும் சவாலான ஒரு படமாக இந்த படம் இருக்கிறது. அதற்காக என்னுடைய கடின உழைப்பை கொடுத்திருக்கிறேன் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.” என தெரிவித்திருக்கிறார். தங்கலான் டீசர் வெளியீட்டு விழாவின் அந்த முழு வீடியோ இதோ...