தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ள நடிகர் சரத்குமார், இன்னமும் பல சினிமாக்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். அதே போல நடிகை ராதிகா சரத்குமாரும், அம்மா வேடங்களிலும், சித்தி 2 சீரியலிலும் கலக்கி வருகிறார். சரத்குமாரின் இளைய மகன் ராகுல் சரத்தை ரசிகர்கள் நன்கு அறிவார்கள். 

இந்நிலையில் பிகில் படத்தின் பாடலுக்கு ராகுல் டான்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தளபதி விஜய்யின் வெறித்தனம் பாட்டுக்கு செம மாஸாக டான்ஸ் ஆடுகிறார். மேலும தளபதி விஜய் தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  அவர் செம மாஸாக டான்ஸ் ஆடியிருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே ராகுல் பாடிய பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ராகுல் சரத்குமார், தன்னுடைய 16 வயதிலேயே பாப் பாடகராக அவதாரம் எடுத்தவர். ஸ்ரீகாந்த் தேவா இசையில் இவர் பாடிய ரா சன் டேக் ஆப் என்னும் பாடல் உலகளவில் பட்டையை கிளப்பியது. அந்த பாடலை அவரே எழுதி பாடியிருந்தார். 

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். இந்த படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடல் அனைவரின் ஃபேவரைட். ஏஜிஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். நயன்தாரா, டேனியல் பாலாஜி, இந்துஜா, கதிர், ஜாக்கி ஷெராஃப், வர்ஷா பொல்லாமா, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்திருந்தனர்.

ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 25-ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அனைத்து வசூல் சாதனைகளையும் உடைத்தது 'பிகில்' படத்தின் வசூல்.

ராகுலின் இந்த நடனத்தை கண்ட ரசிகர்கள், 90களில் சரத்குமார் ஆடுவதை பார்ப்பது போல் உள்ளது என்று லிட்டில் சுப்ரீம் ஸ்டாரை பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வருங்காலத்தில் ராகுல் சினிமாவில் கால் பதிப்பாரா ? என்ற கேள்வியையும் கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.