2020-ல் கொரோனா வைரஸ் காரணமாக நிலவி வரும் அசாதாரண நிலை காரணமாக பல திரைப்படங்கள் நேரடியாக முன்னணி OTT தளங்களில் வெளியாகி வருகின்றன.சில முன்னணி நடிகர்களின் படங்களும் OTT தளங்களின் வழியாக வெளியாகின.தொடர்ந்து பொங்கலுக்கும் இந்த ரூட்டை சில படங்கள் பின்பற்றி ரிலீஸிற்கு தயாராக உள்ளன.

எப்போதும் புதுமையாக எதையாவது செய்யும் சன் டிவி இதிலும் புதுமையாக ஒரு ரூட்டை தேர்வு செய்தது.படங்களை OTT-யில் வெளியிடாமல் நேரடியாக டிவியில் படங்களை முதல் முறையாக ஒளிபரப்ப தொடங்கினர்.தீபாவளிக்கு நேரடியாக சன் டிவியில் நாங்க ரொம்ப பிஸி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.சில நாட்களுக்கு பிறகு இந்த படம் சன் NXT தளத்திலும் வெளியிடப்பட்டது.

தற்போது தங்கள் அடுத்த ரிலீஸிற்கு சன் டிவி தயாராகி வருகின்றனர்.கொம்பன்,குட்டி புலி,மருது உள்ளிட்ட கிராமத்து ஆக்ஷன் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் முத்தையா.விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் புலிக்குத்தி பாண்டி படத்தை முத்தையா இயக்கியுள்ளார் இந்த படம் நேரடியாக பொங்கலுக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது

லட்சுமி மேனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சமுத்திரக்கனி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.சன் டிவி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஜனவரி 15ஆம் தேதி 6.30 மணிக்கு நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.சொல்லாமத்தான் என்று தொடங்கும் இந்த பாடலின் லிரிக் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்