இன்டர்நெட் சென்சேஷன் ஆக ஒரு அடார் லவ் திரைப்படத்தின் மூலம் ஆனவர் அந்த படத்தின் நாயகி ப்ரியா வாரியர்.இந்த படம் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இவரது கண்ணசைவிற்கும் , பிளையிங் கிஸ்ஸிக்கும் ஒட்டுமொத்த ரசிகர்களும் அடிமையாகிவிட்டனர்.உமர் லுலு இயக்கத்தில் ஷான் ரஹ்மான் இசையில் உருவான இந்த படத்தில் ரோஷன் பிரியா வாரியருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

பிரியா வாரியருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்த படத்தை தமிழில் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக கலைப்புலி தாணு வெளியிட்டார்.இந்த படம் தமிழில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.2020 தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் தனது இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறினார் ப்ரியா வாரியர்.சில மாதங்களுக்கு பிறகு பிறகு மீண்டும் இணைந்தார் ப்ரியா வாரியர்.

லாக்டவுனில் அதிக நேரம் சமூகவலைத்தளங்களில் செலவிட்டதால் தனக்கு ஒரு பிரேக் தேவைப்பட்டதென்று அதற்கான காரணத்தை தெரிவித்தார்.இதனை தொடர்ந்து இவர் சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.இவற்றில் சில ரிலீஸிற்கு தயாராகவும் உள்ளன.தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சில முக்கிய படங்களில் நடித்துள்ளார் ப்ரியா.

தற்போது இவர் நடித்துள்ள தெலுங்கு படத்தில் இருந்து இவரது வீடியோ பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.ப்ரியா வாரியரின் டான்ஸை பார்த்த ரசிகர்கள் இவர் இவ்வளவு அழகாக நடமாடுவாரா என்று ஆச்சரியத்தில் உள்ளனர்.சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வரும் இந்த வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்