தமிழகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனமங்களில் ஒன்று சத்ய ஜோதி பிலிம்ஸ்.சமீபத்தில் தங்கள் முதல் கன்னட படத்தை அறிவித்தனர்.கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கும் இந்த படத்தை ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு இயக்குகிறார்.

Priya Anand Heroine For Shiva Rajkumar RDX

தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளில் நடித்த ஒரு நடிகை ப்ரியா ஆனந்த்.கடைசியாக துருவ் விக்ரம் நடித்திருந்த ஆதித்ய வர்மா திரைப்படத்தில் ஒரு கதாநாயகியாக நடித்திருந்தார்.

Priya Anand Heroine For Shiva Rajkumar RDX

சத்யஜோதி தயாரிக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ப்ரியா ஆனந்த் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.தற்போது இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்து ப்ரியா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.