வாமனன் படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் ப்ரியா ஆனந்த்.இந்த படத்திலேயே இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறிவிட்டார்.அடுத்ததாக சில தெலுங்கு படங்களில் நடித்தார் ப்ரியா ஆனந்த்,அந்த படங்களும் நல்ல வரவேற்பை பெற வெற்றிகரமான நாயகியாக உருவெடுக்க தோன்றினார் ப்ரியா ஆனந்த்.

தொடர்ந்து சித்தார்த் நடித்த 180 படத்திலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.அடுத்ததாக சில தெலுங்கு மற்றும் இங்கிலிஷ் விங்கிலீஷ் போன்ற சூப்பர்ஹிட் ஹிந்தி படங்களில் நடித்து அசத்தினார் ப்ரியா ஆனந்த்.அடுத்ததாக சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் ஹீரோயினாக நடித்த ப்ரியா ஆனந்த் தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக மாறினார்.

அரிமா நம்பி,வணக்கம் சென்னை,வை ராஜா வை,கூட்டத்தில் ஒருவன் என்று தொடர்ந்து பல வெற்றிப்படங்களில்  நடித்து அசத்தினார் ப்ரியா ஆனந்த்.தமிழ் மட்டுமின்றி கன்னடம்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்து அசத்தினார் ப்ரியா ஆனந்த்.கடைசியாக LKG,ஆதித்ய வர்மா படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இவர் நடித்துள்ள சுமோ திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது,அடுத்ததாக பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் நடித்து வருகிறார்.இவர் அசோக் செல்வனுடன் நடித்துள்ள மாயா குறும்படம் இன்று வெளியாகவுள்ளது.தற்போது இவர் நடித்துள்ள Dream Mein Entry என்ற மியூசிக் வீடியோ பாடல் வெளிவந்துள்ளது.சமூகவலைத்தளங்களில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.