நடிகையாக வேண்டும் என்ற கனவோடு பலரும் தங்கள் திறமைகளை டிக்டாக்,ரீல்ஸ் உள்ளிட்டவை மூலம் வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றனர்.அப்படி டிக்டாக் மூலம் பிரபலமாகி தமிழ் சின்னத்திரையில் அசத்தி வருபவர் ப்ரணிகா தக்ஷு.தனது டிக்டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த இவர் அடுத்ததாக சில குறும்படங்களில் நடித்து அசத்தினார்.

இவர் நடித்த வெப் சீரிஸ்,குறும்படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடிக்க , பிரபலமானவராக மாறினார் ப்ரணிகா,இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.தனது நடிப்பு திறமையை நிரூபித்த ப்ரணிகா அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

இவற்றை தவிர காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பங்கேற்று பைனல் வரை சென்று அசத்தினார் ப்ரணிகா.தற்போது இவர் நடிக்கும் புதிய சீரியல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செம ஹிட் தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடரில் சிறப்பு தோற்றத்தில் இணைந்துள்ளார்.

பள்ளி மாணவியாக இந்த தொடரில் நடித்துள்ளார் ப்ரணிகா , இவரது எபிசோடுகள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.சமீபத்தில் பள்ளி மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த சம்பவங்களை மையப்படுத்தியும் அதற்கு தீர்வு கூறும் விதமாகவும் ப்ராணிகவின் எபிசோடுகள் இருக்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த விஷயத்தை சீரியல் மூலம் அனைவரிடமும் கொண்டுசேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்த சீரியல் குழுவினர் மற்றும் நடிகை ப்ரணிகாவிற்கு கலாட்டா சார்பாக பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.