மலையாள திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராகவும் விளங்கும் ஃபகத் பாசில் அடுத்தடுத்து வித்தியாசமான கதாபாத்திரங்களையும் கதைகளையும் தேர்ந்தெடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக இந்த ஆண்டு மலையாளத்தில் ஃபகத் பாசில் நடிப்பில் வெளிவந்த இருள், ஜோஜி, மாலிக் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

சமீபத்தில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்த புஸ்பா திரைப்படத்திலும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஃபகத் பாசில் அடுத்ததாக, தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் விக்ரம் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் ஃபகத் பாசில் நடிப்பில் விரைவில்  வெளிவரவுள்ள திரைப்படம் மலையன்குஞ்சு. இயக்குனர் சஜிமோன் பிரபாகர் இயக்கத்தில் ஃபகத் பாசிலுடன் இணைந்து ராஜிஷா விஜயன், இன்தரன்ஸ், ஜாஃபர் இடுக்கி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஃபகத் பாசிலின், ஃபகத் பாசில் அண்ட் ஃபிரண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மலையன்குஞ்சு திரைப்படத்திற்கு மாலிக் படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மலையன்குஞ்சு திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…