கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்கள் தங்களின் பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். 

PrakashRaj

மதிய நேரம்,ஓய்வெடுக்கும் பிரகாஷ்ராஜின் முதுகில் ஏறி அவரது மகன் மிதித்து விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அப்பதிவில் ஞாயிற்றுக்கிழமை மதியம், என் தோட்டத்தில்... எனது மகன் என்னை பழைய நினைவுகளுக்கு கொண்டு செல்கிறான். நான் சிறுவனாக இருந்த போது என் அப்பாவுக்கு செய்ததை இன்று அவன் எனக்கு செய்கிறான் என அன்பு நிறைந்த பதிவை பதிவிட்டுள்ளார். 

PrakashRaj

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் பிரகாஷ்ராஜ். கடைசியாக தனுஷ் நடித்த அசுரன் படத்தில் நடித்திருந்தார்.