கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்கள் தங்களின் பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தீனா தனது வீட்டில் வேலை பார்க்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். சிறிய நேரத்தில் லிட்டர் கணக்கில் பால் கறந்து பட்டையை கிளப்புகிறார் தீனா. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Dheena

தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான தீனா, தனது டைமிங் காமெடியால் ரசிகர்களை ஈர்த்தார். பவர் பாண்டி படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. தும்பா படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தாலும், கைதி திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. கார்த்தியுடன் இணைந்து காமெடி சென்டிமென்ட் காட்சியிலும் அசத்தியிருப்பார். 

Dheena

தற்போது மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் நடித்துள்ளார். மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் தீனா பேசியது அரங்கத்தை நகைச்சுவை மழையில் நனையச்செய்தது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Veetla velai Pathu Evalo nal achu.. @vijaytelevision

A post shared by Dheena (@dheena_offl) on