மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் சினம்,பாக்ஸர்,அக்னி சிறகுகள்,அருண் விஜய் 31 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.சினம் படத்தை ஹரிதாஸ் பட இயக்குனர் GNR குமரவேலன் இயக்குகிறார்.

Arun Vijay Sinam Song Recording Through Video Call

குப்பத்து ராஜா,சிக்ஸர் உள்ளிட்ட படங்களில் நடித்த Palak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தில் அருண் விஜய் போலீசாக நடித்துள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Arun Vijay Sinam Song Recording Through Video Call

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் நிறைவடைந்தது.தற்போது இந்த படத்தின் பாடல் ரெக்கார்டிங் வேலைகள் நடந்து வருவதாக படத்தின் இயக்குனர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.ஊரடங்கு காரணமாக வீடியோ கால் மூலமாக இந்த வேலைகள் நடந்து வருகின்றன.