ஷூட்டிங் ஸ்பாட்டில் குத்தாட்டம் போட்ட சீரியல் குழுவினர் !
By Aravind Selvam | Galatta | June 09, 2021 16:21 PM IST

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கும்.அதில் நடிக்கும் புதுமுகங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் பிரபலங்களாக வெகு விரைவில் வளர்ந்து விடுவார்கள்.கொரோனா முதல் அலையை அடுத்து தொடங்கப்பட்ட புதிய தொடர் பூவே உனக்காக.தொடங்கப்பட்டது முதல் ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்று வருகிறது.
அருண்,ராதிகா ப்ரீத்தி,ஜோவிதா லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்து வந்தனர்.சில மாதங்களுக்கு முன் ஜோவிதா சில காரணங்கள் எதிர்பாராத விதமாக இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.இவர் விலகியபிறகும் கதையின் விறுவிறுப்பு குறையாமல் சீரியல் குழு பார்த்துக்கொண்டனர்.
ஜோவிதா விலகியதை அடுத்து அந்த கதாபாத்திரத்தை அப்படியே கதையில் இருந்து ஓரங்கட்டி விட்டு கதையை தொடர்ந்தனர்.சில நாட்களுக்கு முன் தொடரின் நாயகனாக நடித்து வரும் அருண் சில காரணங்களால் இருந்து விலகுவதாக அறிவித்தார்.இவரது இந்த திடீர் முடிவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
ஹீரோ அருணுக்கு பதிலாக புது ஹீரோவாக அஸீம் தற்போது இணைந்துள்ளார்.இந்த தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர் ஹீரோயின் ராதிகா ப்ரீத்தி.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது ஏதேனும் ஒன்றை ஷேர் செய்து வருவார்.தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் நடிகர்,நடிகைகளுடன் இணைந்து நடன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.
Vijay TV's serial actor now enters Sun TV in style - Big announcement made!
09/06/2021 04:31 PM
Big important clarification on Power Star Pawan Kalyan's next film!
09/06/2021 04:00 PM